துப்பறியும் நபர் கிட்டத்தட்டக் கொலையாளியை நெருங்கும்போது, இயற்கையான சில சம்பவங்கள் அதனைத் தடுக்கின்றன என்பதாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள் திரைக்கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றன. இரண்டு மைய கதாபாத்திரத்தை வைத்து சமூகத்தில் மண்டிக்கிடக்கும் அழுக்குகளான ஊழல், பொய், வன்முறைகளை அலசியிருக்கிறார்கள். அதனைப் பார்வையாளர்களை சலிப்படையவிடாமல் செய்திருப்பது சிறப்பு.
அதே சமயம், முதல் நான்கு எபிசோடுகளில் இருக்கும் வேகம் அடுத்த நான்கு எபிசோடுகளில் குறைந்துவிடுகிறது. இருப்பினும் இந்த ஏற்ற இறக்கங்கள் கதைக்களத்துக்குத் தேவையானதாகவே இருக்கின்றன.
கதைக்களம் லீனியராகச் செல்லாமல் பல்வேறு கிளைக் கதைகளைக் கொண்டு நான்-லீனியராக செல்வது சுவாரஸ்யமான யுக்தி. அது சில சமயங்களில் பார்வையாளர்களின் கவனம் தவறினால் மீண்டும் பின்னால் வந்து பார்க்க வைக்கிறது. கூடுதல் சிறப்பாக முக்கிய கதாபாத்திரத்தை மட்டும் ஆழமாக எழுதாமல் கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய பார்வையையும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். இது வெப்டூனில் வெளியான காமிக்ஸ் தொடர் என்பதால் இலக்கியத்தன்மையான குறியீடுகளையும் ஆங்காங்கே காண முடிகிறது.
+ There are no comments
Add yours