Samantha: “மயோசைட்டிஸால் பாதிக்கப்பட்டதைப் பொதுவெளியில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தது!” – சமந்தா | Samantha Ruth Prabhu about going public with her Myositis Diagnosis

Estimated read time 1 min read

படத்தின் வெற்றிக்காக புரோமோஷன் பணிகளில் என்னை ஈடுபடுமாறு தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார். அதனால் நான் ஒரு நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டேன். அதிக அளவு மருந்துகளை அப்போது எடுத்துக்கொண்டிருந்தேன். அந்த நேர்காணலில் என்னுடைய தோற்றம் எப்போதும்போல் இல்லை. அதனால்தான் மயோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து பொதுவெளியில் அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன். அந்தச் சமயத்தில் சிலர் என்னை ‘சிம்பத்தி குயின்’ என்று அழைத்தார்கள்” என்று கூறியிருக்கிறார். 

மேலும் பேசிய அவர், “ஒரு மனிதராக, நடிகையாகப் பரிணாம  வளர்ச்சி அடைந்திருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில், என்னைப் பற்றி தவறாகப் பேசுவதையும், எழுதுவதையும் தேடுவேன். அதிலிருந்து சில விஷயங்களை மாற்றிக்கொள்வேன். இங்குப் பலர் சிரமங்களில் இருக்கும்போது அதனை வெளிப்படுத்த ஒரு வடிகால் தேவை. அந்த வகையில் சோஷியல் மீடியாதான் சிறந்த போர்டல் என்று நான் நினைக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார். 

சமூகவலைதளங்களில் போட்டோஷூட் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது, பாட்காஸ்ட்டில் பேசுவது என சமந்தா தன்னை பிஸியாக வைத்துக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours