பேண்டஸி கலந்த ரொமாண்டிக் படத்தில் நித்யா மேனன்
16 மார், 2024 – 11:07 IST
தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகையான நித்யா மேனன். தமிழில் ‛காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது இவரின் புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி இந்த படத்தை எழுதி, இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ரொமான்ஸ் காமெடி கலந்த பேண்டஸி கதையம்சம் நிறைந்த படமாக உருவாகிறது. இதில் கதையின் நாயகர்களாக வினய் ராய், நவ்தீப் நடிக்க, நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பணிகளை பிரீத்தா ஜெயராமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சண்முகராஜா கவனிக்க உள்ளார். பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
+ There are no comments
Add yours