Ninaithen Vandhai Zee TV Serial March 15 Update | நினைத்தேன் வந்தாய் அப்டேட்: ஹாஸ்பிடலில் வைத்து எழில் போட்ட கண்டிஷன்.. அப்பாவை மீறி அபி எடுத்த முடிவு

Estimated read time 1 min read

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சுடர் அசைன்மென்ட்டிற்காக எழிலிடம் பேசி பிள்ளைகளை ஹாஸ்பிடல் அழைத்துச் செல்ல அனுமதி வாங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சுடரை தடுத்து நிறுத்தும் கனகவல்லி

அதாவது, பிள்ளைகள் நான்கு பேரும் எழிலுடன் ஹாஸ்பிடல் கிளம்ப கனகவல்லி சுடரை போக வேண்டாம் என தடுத்து நிறுத்தி விடுகிறாள். இவர்கள் கிளம்பிய பிறகு பசங்களே எப்பயாச்சு தான் அப்பாவோட சேர்ந்திருக்காங்க அதனாலதான் உன்னை போக வேணாம்னு சொன்னேன் என்று சொல்ல சுடரும் அதை ஏற்றுக் கொள்கிறாள்.

பிள்ளைகள் காரில் போகும்போது ராமையா ஹாஸ்பிடல்ல எந்த அமர்க்களமும் செய்யக்கூடாது அப்பா சொல்றதை கேட்டு அமைதியா இருக்கணும் என்று சொல்ல குழந்தைகள் ராமையாவை கலாய்கின்றனர். 

கண்டீஷன் போடும் எழில்

அடுத்து இவர்கள் ஹாஸ்பிடலுக்கு வந்து இறங்க எழில் நீங்க இங்க போகக்கூடாது, அங்க போகக்கூடாது இது டேஞ்சரான ரூம் என கண்டிஷன் மேல கண்டிஷன் போட்டு சரி எனக்கு வேலை இருக்கு ரமேஷ் ஒரு டாக்டர் வந்து உங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதை சொல்லிக் கொடுப்பாரு என்று சொல்லி கிளம்புகிறான். 

மேலும் படிக்க | இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட படங்கள்! டாப்பில் விஜய்யின் படம்..முழு லிஸ்ட்!

ரூமுக்குள் இருக்கும் பிள்ளைகள் இங்கும் அங்கும் சற்று கண்டதை தொட்டு சேட்டை செய்கின்றனர். டாக்டர் ரமேஷூம் வராததால் அபி ரூமுக்குள்ள இருந்தா எப்படி அசைன்மென்ட் பண்றது வாங்க வெளிய போகலாம் என்று சொல்லி எல்லோரையும் வெளியே கூட்டி வருகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | OTT Release: மார்ச் 27 அன்று பிளாக்பஸ்டர் ‘லவ்வர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours