‘விடாமுயற்சி’யை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இதில் சஞ்சய்தத், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கஸன்ட்ரா எனப் பலரும் நடித்துவருகின்றனர். ஆக்ஷனும் எமோஷனும் கலந்த கலவையாகப் படம் உருவாகிவருகிறது. இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் 50 சதவிகிதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்றும், மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 35 நாட்களாவது தேவைப்படும் என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ‘வேட்டையன்’ படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து மீதம் 25 சதவிகிதமே இருக்கிறது என்பதால் ‘வேட்டையன்’ படத்தை முடித்துவிட்டு, ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பைத் தொடரலாம் எனத் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் பரவியுள்ளது. ‘வேட்டையன்’ படப்பிடிப்பு நிறைவடைய ஏப்ரல் கடைசி ஆகலாம் என்றும், அதன்பின்னரே ‘விடாமுயற்சி’யின் மீதமுள்ள படப்பிடிப்பு தொடரும் என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில்தான் திடீரென ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தை அறிவித்துள்ளனர். அஜித்தைப் பொறுத்தவரை ஒரு படத்தை முழுவதுமாக முடித்துவிட்டுத்தான் அடுத்த படத்திற்குச் செல்வார். ஆதிக்கின் பட டைட்டில், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட்டாலும், நடிகர்களின் தேர்வு இன்னமும் முடிவாகவில்லை. ‘குட் பேட் அக்லி’க்கு ஆதிக்கின் ‘பஹீரா’, ‘மார்க் ஆண்டனி’ படங்களின் ஒளிப்பதிவாளரான அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ‘துணிவு’, ‘மார்க் ஆண்டனி’ படங்களுக்கு எடிட்டிங் செய்த விஜய் வேலுக்குட்டி இதற்கும் படத்தொகுப்புப் பணிகளைச் செய்யவிருக்கிறார். ‘விடாமுயற்சி’யின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் ஆக்ஷன்களைக் கவனிக்கிறார். இதன் படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்கத் திட்டமிட்டு வருகிறார்கள்.
+ There are no comments
Add yours