நடிப்பதை நிறுத்திவிட்டு தான் திருமணம் செய்து கொண்டேன் : ‘ஆபீஸ்’ மதுமிலா பேட்டி
14 மார், 2024 – 12:06 IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் நடித்து மிகவும் பிரபலமானவர் மதுமிலா. தொடர்ந்து வெள்ளித்திரையில் பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். மதுமிலாவுக்கு ரசிகர்களிடம் இருந்து வரவேற்புக்கு கண்டிப்பாக பெரிய நடிகையாக வலம் வருவார் என்று பலரும் நம்பினர். ஆனால், மதுமிலா கனடாவை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிலேயே செட்டிலாகிவிட்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது பிரபலமான மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக கலக்கி வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த பேட்டியில் நடிப்புக்கு எப்போது கம்பே? எதற்காக இவ்வளவு பெரிய கேப்? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மதுமிலா, ‛‛கேப் என்றெல்லாம் இல்லை ரிட்டையர்ட் தான். நடிப்பதை நிறுத்திவிட்டு தான் திருமணம் செய்து கொண்டேன்” என பளீச் பதில் அளித்துள்ளார். மதுமிலா கம்பே கொடுப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவரது பதில் சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.
+ There are no comments
Add yours