சென்னை: நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார் இப்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதில் த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சில நாட்களுக்கு முன் படக்குழுவினர் சென்னைத் திரும்பினர். தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
சில நாட்கள் முன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் அஜித். சிகிச்சைக்கு பின் மீண்டும் படபிடிப்பில் இணைவார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், அஜித்தின் 63வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.