Exclusive: நடிகர் மற்றும் சமையல் கலைஞர் – `குக்கு வித் கோமாளி’யில் தாமுவுடன் இணையப் போவது இவர்தான்! | Cooku with Comali 5: This actor turned chef is going to be the judge along with Chef Damu

Estimated read time 1 min read

நிகழ்ச்சியை இயக்கித் தயாரித்தது ‘மீடியா மேஷன்’ நிறுவனத்தின் ரஊஃபா. இந்தாண்டு ஐந்தாவது சீசன் தொடங்கவிருந்த சூழலில் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து தங்களது நிறுவனம் விலகிக் கொள்வதாக அறிவித்தார் ரஊஃபா.

எனவே குக்கு வித் கோமாளி ஐந்தாவது சீசன் வெளிவருமா, தயாரிப்பது யார், நிகழ்ச்சியின் இயக்குநர் யார் என்பன போன்ற சந்தேகங்கள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வருகிறவர்களுக்கு இருந்து வந்தது.

செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட்

செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட்

தொடர்ந்து நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு தகவல்களும் சமூக வலைதளங்களில் கசிந்தவண்ணம் இருந்தன.

‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து தானுமே வெளியேறுவதாக வெங்கடேஷ் பட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ‘புதிய ஒரு களத்தில் மீண்டும் சந்திப்போம்’ என்றதுடன் தன்னுடன் தாமுவும் நிச்சயம் இருப்பார் எனச் சொன்னார். ஆனால் ஓரிரு நாளில் தாமு குறித்துத் தான் பதிவிட்ட கருத்தை நீக்கிவிட்டார்.

இது தொடர்பாக சில தினங்களுக்கு முன் விகடன் தளத்தில் நாமும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

பட்டுக்குப் பதில் ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சுரேஷ் உள்ளிட்ட சிலரது பெயர்கள் பரிசீலிக்கப் பட்டு வருவதாக நம் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours