ராபர்ட் டெளனியிடம் இருந்த போதை பழக்கத்தால் அவரின் முதல் மனைவி அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றுப் பிரிந்துவிட்டார். அதன் பிறகு அவரின் இரண்டாவது மனைவியும் இதே பிரச்னையினால் பிரிந்துவிட்டார். தொடர்ந்து ராபர்ட்டின் மூன்றாவது மனைவியான சூசன்தான் இவர் போதை பழக்கங்களிலிருந்து வெளிவர பெரும் பங்காற்றியிருக்கிறார் என இவரே பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
நடிப்பில் மட்டுமல்லாமல் பாடல்கள் பாடுவதிலும் இவருக்கு அதீத ஆர்வமாம். இவர் நடித்த படங்களின் பல பாடல்களை இவரே பாடியிருக்கிறார். மேலும், அரசியலிலும் குரல் கொடுத்திருக்கிறார். அமெரிக்காவின் ‘Democratic Party’க்கு தனது ஆதரவைத் தெரிவித்ததோடு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு வாக்களிக்கக்கூடாது எனக் காணொலிகளையெல்லாம் இவர் வெளியிட்டிருக்கிறார்.
பல தடைகளைத் தாண்டி ஓடிய கலைஞனுக்கு ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படத்தின் மூலம் முதலாவது ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.
+ There are no comments
Add yours