Latest Cinema News Actor Politician Seeman Was The First Choice For Vathiyar Character In Viduthalai Part 1 Before Vijay Sethupathi

Estimated read time 1 min read

Viduthalai Part 1 Vijay Sethupathi Character Latest Cinema News : கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியான படம், விடுதலை பாகம் 1. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க, காமெடி நடிகராக நடித்து வந்த சூரி ஹீரோவாக நடித்தார். முக்கிய கதாப்பாத்திரத்தில் வாத்தியாராக நடித்தவர், விஜய் சேதுபதி. இவருக்கு முன்னர், இந்த கதாப்பாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல, ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் கூட…அவர் யார் தெரியுமா? 

விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்தவர்..

விடுதலை பாகம் 1 படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்தவர் வேறு யாருமில்லை, சீமான்தான். நாம் தமிழர் அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் இவர், சினிமா துறை மூலமாக பலருக்கு பரீட்சியமான முகமாக மாறினார். 90களில் தமிழ் திரைப்படங்களின் இயக்குநராக இருந்த இவர், தன் படங்களின் தோல்விகளுக்கு பிறகு சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். குடும்ப கதைகளில் அண்ணன்-அப்பா கதாப்பாத்திரங்களில் நடிப்பது இவரது வழக்கம். 

கடந்த ஆண்டு வெளியான ‘முந்திரிக்காடு’ என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். இவரைத்தான் விடுதலை படத்தில் ‘வாத்தியார்’ கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க வைக்க இருந்தனராம். இது குறித்த தகவலை சீமானே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Seeman

என்ன காரணமாக இருக்கும்?

விடுதலை படத்தில் வரும் வாத்தியார் கதாப்பாத்திரம் மிகவும் புரட்சிமிகு கதாப்பாத்திரமாகும். நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான சீமான், இது போன்ற கதாப்பாத்திரங்களில்தான் நடித்து வருகிறார். ஆனால், அந்த கதாப்பாத்திரங்களிலும் தனது அரசியல் நோக்கங்களை இவர் திணிப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. வாத்தியார் கதாப்பாத்திரத்தில் இவரை நடிக்க வைத்திருந்தால், இதையேத்தான் அவர் செய்திருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | காதலரை கரம் பிடித்த 40 வயது பிரபல நடிகை! யாரென்று தெரிகிறதா?

விடுதலை பாகம் 2 படப்பிடிப்பு எந்த நிலையில் உள்ளது?

விடுதலை படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி ஓராண்டு ஆகவுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். முதல் பாகத்தில் சூரியும், அவர் வாழும் கிராம மக்கள் குறித்த கதையும்தான் அதிகமாக காட்டப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகத்தில் வாத்தியாராக வரும் கதாப்பாத்திரத்திற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தின் ஃப்ளேஷ் பேக் காட்சிகள் இடம் பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்கும் மஞ்சு வாரியர்..

விடுதலை பாகம் 2 படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புரட்சியாளரான வாத்தியார் கதாப்பாத்திரத்திற்கு ஒரு குடும்பம் இருப்பது போலவும் அதை எதிரிகள் அழித்து விட்டது பாேலவும் ஃப்ளேஷ் பேக் காட்சிகளில் இடம் பெற உள்ளதாம். இதற்கான படப்பிடிப்புதான் தற்போது நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. சத்தியமங்களம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இப்படம், இந்த வருடத்தின் ஜனவரி மாதமே வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. 

மேலும் படிக்க | கோடிகளில் புரளும் ராஷ்மிகா! பெரிய வீடு-சொகுசு கார்..மாெத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours