Actress Rashmika Mandanna Total Net Worth Assets And Salary Details In Tamil Check Details

Estimated read time 1 min read

Actress Rashmika Mandanna Total Net Worth And Asset Details : இந்தியாவின் நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிகை, ராஷ்மிகா மந்தனா. கன்னட மொழி படங்களில் நடித்து அறிமுகமான இவர், தற்போது பான் இந்தியா அளவில் பெரிய நடிகையாக இருக்கிறார். தமிழிலும் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். இவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா:

ராஷ்மிகா, 2016ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான கிரிக் பார்டி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். இப்படத்தில் தன்னுடன் நடித்த ரக்ஷித் ஷெட்டி மீது காதலில் விழுந்த இவர், அவரை திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால், இந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது. கன்னட திரையுலகில் இருந்து தெலுங்கிற்கு வந்த ராஷ்மிகா, இங்கு விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காமரேட், கீதா கோவிந்தம் என இரு படங்களிலும் நடித்தார். இப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார்.

ராஷ்மிகா நடித்த தமிழ் படங்கள்..

நடிகை ராஷ்மிகா மந்தனா, 2021ஆம் ஆண்டு வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ராஷ்மிகாவிற்கு விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அவரது நடிப்பும் நடன அசைவுகளும் நல்ல வரவேற்பினை பெற்றன. 

மேலும் படிக்க | காதலரை கரம் பிடித்த 40 வயது பிரபல நடிகை! யாரென்று தெரிகிறதா?

பாலிவுட்டில் டாப் நடிகையாவாரா?

நடிகை ராஷ்மிகா குறித்து தென்னிந்தியா முழுவதும் பேச ஆரம்பிக்க, சில பாலிவுட் இயக்குநர்களும் ராஷ்மிகாவை தங்களது படங்களில் நடிக்க வைக்க ஆசைப்பட்டனர்.  ‘குட்பை’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடிக்க, தொடர்ந்து மிஷன் மஞ்சு படத்திலும் நடித்தார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்தில் அவர் கீதாஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

பெரிய வீடு…சொகுசு கார்..

நடிகை ராஷ்மிகா மந்தனா, மும்மொழி படங்களிலும் நடித்து தற்போது டாப் இந்திய நடிகைகளின் லிஸ்டில் இருக்கிறார். ராஷ்மிகா, பெங்களூருவில் ரூ. 8 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு அப்பார்ட்மெண்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வீடு, அவருக்கு சொந்தமானதாம். அது மட்டுமன்றி, மும்பையில் ஒரு வீடும், கோவா, கூர்க், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நிலங்களும் இவருக்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

ராஷ்மிகா, ஆடி க்யூ 3 காரை சொந்தமாக வைத்துள்ளார். அது மட்டுமன்றி அவரது வீட்டில் ஹுண்டாய் க்ரெட்டா, மெர்சிடீஸ் பென் சி, டொயோட்டா இன்னோவா உள்ளிட்ட சில கார்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அது மட்டுமன்றி, ராஷ்மிகா தற்போது படம் ஒன்றுக்கு 4 முதல் 5 கோடி வரை வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இவரது சொத்து மதிப்பு மட்டும் சுமார் 45 முதல் 50 கோடிகள் வரை இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதைக்கேட்ட ரசிகர்கள், “நேஷனல் க்ரஷ்ஷின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..” என மூக்கில் கைவைத்துள்ளனர். 

மேலும் படிக்க | குட்டி தளபதியாக மாறிய சிவகார்த்திகேயன்! ரசிகர்களை சந்தித்து என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours