அதில் இளையராஜா உருவாக்கின ராகங்களில் ஒன்றான ராஜலகரி ராகம், ‘மாண்டலின்’ ஶ்ரீனிவாஸுக்குப் பிடித்த ராகமாகும். ஆகையால் இந்த நினைவு தினத்தில் ராஜாவின் ராகங்களும், அவரது நத்திங் பட் விண்டில் இருந்து சில இசைத் துண்டுகளும் இசைக்க முடிவு செய்தனர். இதற்காக ராஜாவிடம் முறைப்படி அனுமதியும் வாங்கிவிட்டனர். இந்த நினைவு தினம் மியூசிக் அகாடமியில் கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக நிகழ்ச்சிக்கான ஒத்திகை டி.எஸ்.பி-யின் ஸ்டூடியோவில் நடைபெற்றது. ஒத்திகையைக் காண விரும்பிய இளையராஜா, டி.எஸ்.பி-யிடம் ‘உன் ஸ்டூடியோவிற்கே வந்து பார்க்கிறேன்’ எனச் சொல்லிவிட்டார். ராஜாவின் இந்த வருகையை சற்றும் எதிர்பார்க்காமல், நெகிழ்ந்தே போயிட்டார் டி.எஸ்.பி. ராஜாவின் தீவிர பக்தர் அவர். இதைப் பலரும் அறிவார்கள். ஆனாலும் டி.எஸ்.பிதான் பலமுறை ராஜாவின் ஸ்டூடியோவிற்குச் சென்றிருக்கிறார். ஆனால் இவரது ஸ்டூடியோவிற்கு ராஜா செல்வது இதுதான் முதல் முறை.

ராஜாவின் தீவிர பக்தரான டி.எஸ்.பி-யின் ஸ்டூடியோவில் ஆளுயர இளையராஜாவின் புகைப்படம் ஒன்று ப்ரேம் செய்து மாட்டி வைத்திருப்பார்.. ராஜாவை வணங்கிவிட்டுத்தான் அருகே உள்ள சென்டிமென்ட்டான பியோனோ ஒன்றில்தான் அன்றைய இசைப்பணிகளை ஆரம்பிப்பார் டி.எஸ்.பி.
ராஜாவின் எதிர்பாராத விசிட்டால் உள்ளம் குளிர்ந்துவிட்டார் டி.எஸ்.பி. பக்தனின் வேண்டுகோளை ஏற்று தெய்வமே நேரில் வந்து தரிசனம் கொடுத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் அவர் என்கிறார்கள். டி.எஸ்.பி-யின் ஸ்டூடியோவிற்கு வந்த ராஜா, அங்கிருக்கும் பியானோவில் இசைத்து மகிழ்ந்ததை தனது பாக்கியமாகவும் நினைத்து உருகுகிறார் டி.எஸ்.பி” என்கிறார்கள்.
+ There are no comments
Add yours