Jawan Director Atlee Salary Latest News In Tamil : தமிழ் திரைப்பட இயக்குநர் அட்லீ, ஷாருக்கானை வைத்து கடைசியா ஜவான் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் உலகளவில் பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து, அவர் தனது சம்பளத்தை பல மடங்காக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜவான் படத்தை இயக்கி புகழ் பெற்ற அட்லீ:
தமிழில் சில படங்களையே இயக்கினாலும், அவை அனைத்தையும் ஹிட் படமாக்கியவர், அட்லீ. தமிழ் திரையுலகிலேயே டாப் நடிகர்களை வைத்து இயக்கி வந்த இவர், பின்பு பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கானின் பக்கம் சென்று விட்டார். இவரை வைத்து அவர் இயக்கிய படம்தான், ஜவான். தீபிகா படுகோன், நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், உலகளவில் 1000 கோடி வசூலை தாண்டியது. இந்த படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் சில்லி எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்திருந்தது.
ஜவான் படம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்தியில் வெளியான இப்படம் தமிழ் உள்பட சில தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இப்படம் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்றே கூறலாம். காரணம், ஜவான் படத்தில் வந்த காட்சிகள் பல வேறு ஏதோ ஒரு படத்தில் இருந்து சுட்டது போல ரசிகர்களுக்கு தோன்றியது. ஆனால் வட இந்தியாவில் இது போன்ற விமர்சனங்கள் எதையும் சந்திக்காமல் இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.
அட்லீயின் சம்பளம்..
இயக்குநர் அட்லீ, ஜவான் படத்தின் ரிலீஸிற்கு பிறகு படு பிரபலமாகிவிட்டார். சிறந்த இயக்குநருக்கான தாதா சாகேப் பால்கேப் விருதினையும் வென்றார். ஜவான் படத்தை இயக்க அட்லீ, ரூ.30 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தியிருக்கிறாராம், அட்லீ. தனது அடுத்த படத்திற்காக அவர் ரூ.60 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Manjummel Boys : ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ ஓடிடியில் ரிலீஸாவது எப்போது? வெளியானது தகவல்..
அடுத்த படத்தின் ஹீரோ யார்?
தமிழில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்றதை அடுத்து, அட்லீ தெலுங்கு திரையுலகிற்குள்ளும் பிரவேசிக்க இருக்கிறார். தனது அடுத்த படத்தை இவர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. புஷ்பா பட நாயகனும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புஷ்பா: தி ரூல் படத்தின் வேலைகளுக்கு பிறகு, இப்படத்தின் பணிகள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்திற்காகதான் அட்லீ ரூ.60 கோடியை சம்பளமாக வாங்கியிருக்கிறாராம்.
குருவை மிஞ்சிய சிஷ்யன்..
இயக்குநர் ஷங்கர், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றவர். இவரிடம் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர்தான், அட்லீ. தற்போது வரை ஷங்கர் 30 முதல் 40 கோடி வரை சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அவரிடம் சிஷ்யனாக இருந்தவரோ, இப்போது அவரையே மிஞ்சிவிட்டாரே என ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.
மேலும் படிக்க | விவாகரத்திற்கு பின்பு முதன்முறையாக தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா! என்ன சொன்னார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours