இதில் “ஓப்பன்ஹெய்மர்’ ஏழு விருதுகளையும், ‘Poor Things’ திரைப்படம் நான்கு விருதுகளையும் வென்றுள்ளது. ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த துணை நடிகர், சிறந்த பிண்ணனி இசை உள்ளிட்ட விருதுகளைத் தட்டிச் சென்று இந்த ஆஸ்கரில் அதிக விருதுகளைப் பெற்ற திரைப்படமாகியுள்ளது.
இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது ராபர்ட் டௌனி ஜூனியருக்கு வழங்கப்பட்டது. இதுதான் ராபர்ட் டௌனியின் முதல் ஆஸ்கர் விருது. விருது மேடையில் பேசிய அவர், “எனது வேதனைமிகுந்த குழந்தைப் பருவத்திற்கும், இந்த ஆஸ்கர் அகாடமிக்கும் முதலில் என் நன்றியைச் சொல்ல வேண்டும்.
இந்த நேரத்தில் என் கால்நடை மருத்துவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்- அதாவது என் மனைவிக்கு. அவர்தான் காயம்பட்டிருந்த என்னை மீட்டு, ஒரு செல்லப் பிராணியிடம் அன்பு காட்டுவதைப் போல் அரவணைத்து வாழ்க்கை கொடுத்தார். அதனால்தான், இப்போது இங்கு நின்றுகொண்டிருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசி விருதை மட்டுமின்றி மனங்களையும் வென்றார் ராபர்ட் டௌனி.
+ There are no comments
Add yours