ஜிம்மி கிம்மல் 4வது முறையாக இவ்விருது விழாவை தொகுத்து வழங்கினார். இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசையமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு என ஏழு ஆஸ்கர் விருதுகளை நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் வென்றுள்ளது.
![ஆஸ்கர் விருது 2024](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-03%2Fa59f91c9-4866-4605-b5e8-0123144fe25e%2FGettyImages_2074681598_copy.jpg?auto=format%2Ccompress)
சிறந்த நடிகர் விருதை “ஒப்பன்ஹெய்மர்’ படத்திற்காக சிலியன் மர்ஃபி வென்றிருக்கிறார். அதேபோல சிறந்த நடிகை விருதை ‘புவர் திங்ஸ்’ படத்திற்காக எம்மா ஸ்டோன் பெற்றிருக்கிறார். இந்நிலையில் மேடையில் விருதை பெற்றபின் நடிகை எம்மா ஸ்டோன் உணர்ச்சிகரமாகப் பேசியிருக்கிறார். ” சாண்ட்ரா, அன்னெட், கேரி, லில்லி, என இந்த மேடையில் உள்ள அனைத்து பெண்களுடனும் இந்த விருதை நான் பகிர்ந்துகொள்கிறேன். இந்த அங்கீகாரம் என்பது எனக்கானது மட்டும் அல்ல.
+ There are no comments
Add yours