முதல் முறையாக யுவன் இசையில் பாடும் விஜய்!
10 மார், 2024 – 12:42 IST

நடிகர் விஜய் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் என பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியுள்ளார் . ஆனால், யுவன் சங்கர் ராஜா இசையில் இதுவரை விஜய் எந்த பாடலையும் பாடவில்லை. அதேபோல் யுவன் சங்கர் ராஜா விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்திற்கு மட்டும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘ தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்’ படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இதில் முதல் முறையாக யுவன் இசையில் விஜய் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக இன்று பெங்களூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் யுவன் சங்கர் ராஜா பகிர்ந்துள்ளார்.
+ There are no comments
Add yours