“விவசாயிகள் பிரச்னையைத் தீர்க்க அரசுக்கு நேரமில்லை”- கொதித்த நானா படேகர் |Nana Patekar supports farmers and slams government

Estimated read time 1 min read

மகாராஷ்டிராவின் வறட்சிப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் “நாம்’ என்ற அறக்கட்டளையை நடிகர் மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து நானா படேகர் நடத்தி வருகிறார். அதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில் நாசிக்கில் நடந்த ஷேத்காரி சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய படேகர் விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்கவில்லை என விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

நானா படேகர்

நானா படேகர்

இதுதொடர்பாக பேசிய அவர் “ தங்கத்தின் விலை உயர்கிறது, ஆனால் அரிசியின் விலை ஏன் அதிகரிப்பதில்லை? நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இந்த அரசிடம் இருந்து விவசாயிகள் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. உங்களுக்கான அரசை நீங்களே தேர்வு செய்ய வேண்டும். நல்ல எதிர்காலத்தைக் கொண்டு வர வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம்” என்று கூறியிருக்கிறார். இவை தற்போது இணையத்தில்  வைரலாகி வருகின்றன.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours