தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.
சீதா ராமன் : இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பேச வந்த சீதாவிடம் நான்சி என்ன முடிவு பண்ணி இருக்க என்று கேட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சீதாவின் சவாலை ஏற்கும் நான்சி
அதாவது கம்பெனி பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் என்று சீதா சவால் விட இந்த சவாலை நான்சியும் ஏற்றுக் கொள்கிறாள்.
இந்த விஷயம் அறிந்த ராம் சீதாவை பிடித்து சத்தம் போடுகிறான். அதைத்தொடர்ந்து நான்சி வக்கீலை வரவைத்து அக்ரீமெண்ட் ரெடி செய்கிறார்.
ராமை விட்டு பிரிந்து செல்ல வேண்டும்: நான்சி
அக்ரிமெண்ட் ரெடியானதும் எல்லோரையும் கூப்பிட்டு சீதாவை கையெழுத்து போட சொல்கிறாள். அக்ரிமெண்ட்டில் இந்த சவாலில் தோற்றுவிட்டால் ராமை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என எழுதி இருக்கிறது.
மேலும் படிக்க | திரைப்படமாக ஒளிபரப்பாகும் அயலி வெப்தொடர்.. ஜீ தமிழ் கொடுத்த செம அப்டேட்
இதைப் பார்த்து மீரா, துரை, சீதாவின் அம்மா உமா, சேது, ராம் ஆகியோர் கையெழுத்து போட வேண்டாம் என சொல்லி தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் நான்சி இது எனக்கும் சீதாவுக்குமான சவால் என்ன பண்ணனும்னு அவளே முடிவு பண்ணட்டும் என சொல்கிறாள்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?
சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | ராம்சரணுடன் இணைந்து நடிக்கும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours