ஹாலிவுட்டை கலக்கும் அவந்திகா
05 மார், 2024 – 12:08 IST
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் குட்டிப் பெண்ணாக நடித்தவர் அவந்திகா. அதற்கு முன்பு பிரமோத்சவம், மனமந்தா படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தமிழில் பூமிகா, படத்தில் நடித்தார். தற்போது அவந்திகா ஹாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாகி இருக்கிறார். டைரி ஆப் எ பியூச்சர் பிரசிடென்ட், மிரா ராயல் டிடெக்டிவ், தி செக்ஸ் லைவ்ஸ் ஆப் காலேஜ் கேர்ள்ஸ் என்ற ஹாலிவுட் வெப் தொடர்களில் நடித்தார். டிஸ்னி பிளஸ் ஓடிடி தளத்திற்காக ‘ஸ்பின்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்தார். இது தவிர ‘சீனியர் ஈயர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள ‘மீன் கேர்ள்ஸ்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மீன் கேர்ள்ஸ் முன்பு தொடராக வெளிவந்து, தற்போது திரைப்படமாகி உள்ளது. இதில் அவந்திகா கிரண் ஷெட்டி என்ற இந்திய பெண்ணாக நடித்துள்ளார். அவர் தவிர அன்கோரியா ரைஸ், ரனீ ராப், அலுல் கார்வலோ, ஜாக்குவல் ஸ்பைவி என்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் வெளியாகி உள்ள இந்த படம் விரைவில் இந்தியாவில் வெளியாகிறது.
இதுகுறித்து அவந்திகா கூறும்போது “திறமையானவர்களுக்கான காலம் இது. இனி வரும் காலமாற்றத்திற்கேற்ப தெற்காசிய பெண்கள் அதிகம் ஹாலிவுட்டில் நடிப்பார்கள். அதற்கான சூழல் எளிதாக அமையும். இந்திய பெண்ணாக ஹாலிவுட்டில் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறுவது எனக்குப் பெருமை. ‛மீன் கேர்ள்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானதை என்னால் நம்பவே முடியவில்லை.
ஹாலிவுட்டில் எனக்கு எந்த பயமும் இல்லை. நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். படம் எப்படி வெளிவரும்? நம்மை அங்குள்ள ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?’ என நிறைய குழப்பம், பயம் இருந்தது. ஆனால், அதை எல்லாம் கடந்து படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி” என்றார்.
+ There are no comments
Add yours