Guna Movie Actress Roshini Current Status What Happened To Her Check Details Here

Estimated read time 1 min read

Guna Movie Actress Roshini Current Status : மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலமாக குணா திரைப்படம் தற்போது பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இப்படத்தில் அபிராமியாக நடித்த நடிகையை பலரும் தேடி வருகின்றனர். அவர் எங்கு இருக்கிறார்? விரிவாக பார்க்கலாம்!

முதலில் யாழ்ப்பாணத்தில் நடிகர் கமல்ஹாசன்,  மனம் குன்றியவராக நடிக்க அங்கே வரும் என்.ஆர்.ஐ பெண்ணைக் காப்பாற்றும் வகையில் கதை எழுதப்பட்டு அதனை படமாக்க திட்டமிடப்பட்ட திரைப்படம் தான் குணா. ஆனால் அந்த சமயத்தில் இலங்கைய்ல் படப்பிடிப்பு நடத்த ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த திரைக்கதையை மாற்றியமைத்து ‘குணா’ என்ற பெயரில் இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதி இயக்கினார். அதில் கமல்ஹாசன் தோற்றம் மற்றும் கதாப்பாத்திரம் மட்டும் முன்னர் எழுதப்பட்டது போலவே பயன்படுத்தப்பட்டு இருந்தது.

குணா குகை:

காதலால் ஏற்படும் வலியும் அதனால் ஏற்படும் வேதனையின் உச்சத்தையும் மைய கருவாக வைத்து வெளியான இப்படத்தில் கதையாக காண்பித்திருப்பர். தன்னுடைய வலி, வேதனையை கமல்ஹாசன் ‘அபிராமி அபிராமி’ என பேசிய வசனம் இன்று வரை பிரபலமாக இருக்கிறது. அதே போல கொடைக்கானலில் ஆள் நடமாட்டமே இல்லாத  இடம் தேவை என மிகவும் சிரமப்பட்டு கடைசியில் குகை ஒன்று தேடி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குகைதான்  1821 இம் ஆண்டு ஆங்கிலேயரால் டெவில்ஸ் கிச்சன் என்று அழைக்கப்பட்ட குகை.. பின்னர் குணா படம் வெளியானதும் இந்த டெவில் கிச்சன் குணா குகை என்று அழைக்கப்பட்டது. 

மேலும் படிக்க | Selvaraghavan : செல்வத்தில் புரளும் செல்வராகவன்! எத்தனை கோடி சொத்துகளுக்கு அதிபதி தெரியுமா?

எங்கே சென்றார்? 

குணா படத்தில் ஹீரோயினாக நடிக்க பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் ரோஷிணி இந்தப் படத்திற்குள் நாயகியாக நடித்தார். இவர் மும்பையை சேர்ந்த, தமிழ் தெரியாத பெண் என்றாலும் ஒவ்வொரு காசியிலும் மிகவும் அழகாக தனது எமோஷனை வெளிப்படுத்தி இருப்பார். உலகநாயகன் கமல்ஹாசனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வெகு சிறப்பாக நடித்திருந்ததாக அப்போதைய விமர்சகர்கள் கூறியிருந்தனர். அப்படத்திற்கு பிறகு அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் ஒட்டுமொத்தமாக திரைத்துறையை விட்டு விலக ரோஷிணி முடிவெடுத்ததாகவும் .அவர் அமெரிக்கா வாழ் வட இந்தியரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் என சொல்லப்படுகிறது. சமூக வலைதளங்களில் ரோஷிணி குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. உண்மையில் அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார்? என்பது சினிமா வட்டாரம் உட்பட யாருக்குமே தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம். இவர், ஜோதிகாவின் சகோதரி என்பதையும் இப்போதுதான் ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தற்போது குணா படம் trending கில் இருக்கும் நிலையில் அபிராமியாக நடித்த ரோஷிணியை பலரும் தேடி வருகின்றனர். இந்த நிலையில்   ஜோதிகாவின் உடன் பிறந்த அக்கா தான் கமல்ஹாசனுக்கு ஜோடியாக குணா படத்தில் நடித்த ரோஷிணி என சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் விக்கிபீடியாவில் இடம்பெற்ற தவறான தகவலை பார்த்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் ஜோதிகாவின் அக்கா ரோஷிணி , குணா பட ரோஷிணி இருவரும் வெவ்வேறு நபர்கள் அவர்கள் இருவருக்கும் சம்பந்தமில்லை..  கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா மூலம் அறிமுகமானவர் தான் குணா படத்தில் நடித்த ரோஷிணி என்றும் அதன் பின்னர் மும்பை சென்ற அவர் என்ன ஆனார்? எங்கே சென்றார் என்பதை கண்டு பிடிக்கவே முடியவில்லை என குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதியே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவா இது? வைரலாகும் புகைப்படங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours