இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்கும் ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் திருமணத்திற்கான முந்தைய கொண்டாட்டங்கள் மார்ச் 1 முதல் 3ம் தேதி (நேற்று) வரை மிகப்பிரமாண்டமாக குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்றது.

இவ்விழாக் கொண்டாட்டத்தில் அமிதாப் பச்சன், ஷாருக் கான், ரஜினிகாந்த், ராம்சரண், தோனி, சச்சின், பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் என உலகெங்கிலும் இருக்கும் தொழிலதிபர்கள், இந்திய சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ‘நாட்டு நாட்டு ’பாடலுக்கு ஷாருக் கான், சல்மான்கான் உள்ளிட்ட பிரபலங்கள் நடனமாடினர். அப்போது ஷாருக் கான் ‘இட்லி, வடை, சாம்பார்’ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? மேடைக்கு வாருங்கள் என்று ராம் சரணை அழைத்திருக்கிறார்.
+ There are no comments
Add yours