Ajith Kumar Vijay Viral Clip From Rajavin Parvaiyile : நெடுங்காலமாக, ஒரு நடிகரை பிடித்த ரசிகர்களுக்கு அவருக்கு போட்டியாக கருதப்படும் இன்னொரு நடிகரை பிடிக்காது. ஆனால் உண்மையில் அந்த இரு நடிகர்களுக்குள் எந்த பகையும் இருக்காது. எம்.ஜி.ஆர்-சிவாஜியில் ஆரம்பித்து, ரஜினி-கமல், விஜய்-அஜித் வரை இந்த ரசிகர்களின் சண்டை தொடர்ந்து வருகிறது. அப்படி, ரசிகர்கள் அடித்துக்கொள்ளும் போது உருவாக்கிய வார்த்தைகள்தான், அணில் மற்றும் ஆமை.
அது என்ன அணில்-ஆமை சண்டை?
விஜய்யை பலர் அணில் என்றும், அஜித்தை பலர் ஆமை என்றும் குறிப்பிடுவர். விஜய்யை அணில் என்று குறிப்பிடுவதற்கு ரசிகர்கள் ஒரு காரணம் வைத்துள்ளனர். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ஒரு நேர்காணலில் 2011ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற ராமர் பாலம் கட்டுவதற்கு அணில்கள் உதவியது போல நடிகர் விஜய் உதவியதாக கூறினார். இதிலிருந்து விஜய்க்கு அணில் என பெயர் வந்தது.
மேலும் படிக்க | தமன்னா நடிக்கும் புதிய படம்! காசியில் துவங்கிய படப்பிடிப்பு!
ஆமை காரணம்?
விஜய்யை அணில் என ரசிகர்கள் அழைப்பது போல, அஜித்தை ஆமை என ரசிகர்கள் அழைப்பர். இவர், தான் நடிக்கும் படங்களில் கூலிங் கிளாஸ் பாேட்டுக்கொண்டு ஸ்லோ மோஷனில் நடப்பார். இதை வைத்துதான் அவருக்கு ரசிகர்கள் ஆமை என பெயர் வைத்தனர்.
அஜித்தை ஆமை என கலாய்த்த விஜய்..
விஜய்யும் அஜித்தும் முதலும் கடைசியுமாக ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். இப்படம் 1995ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து நடித்தது பெரிய விஷயமாக பேசப்பட்டது. இந்த படத்தில் வரும் ஒரு காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.
வைரல் வீடியாே..
ராஜாவின் பார்வையிலேயே படத்தில், விஜய்யும் அஜித்தும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்று ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அதில், அஜித் குமார் விஜய்யை தலையில் தடவிக்கொடுத்து “குட் நைட்” என்பார். அதற்கு விஜய், “என்னடா புதுசா குட்நைட் சொல்ற..இது குட் நைட் இல்ல..டார்டாய்ஸ்” என்பார். டார்டாய்ஸ் என்றால், ஆங்கிலத்தில் ஆமை என்று அர்த்தம். குட் நைட், அப்பாேதும் இப்போதும் கொசு விரட்டியாக இருந்தது. அப்போது டார்டாய்ஸ் என்பதும் கொசு விரட்டியாக இருந்தது. இதை பற்றித்தான் அவர்கள் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
அன்றே கணித்தார் விஜய்..
சுமார், 28 வருடங்களுக்கு முன்னர் வெளியான படத்தில் விஜய் அஜித்தை பார்த்து ஆமை என கூறியதை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். கமெண்ட் செக்ஷனில், ‘அன்றே கணித்தார் விஜய்’ என்று கூறி வருகின்றனர். மேலும், “அப்போவே இப்படி கலாய்த்திருக்கிறாரே..” என்றும் விஜய்யை பார்த்து கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | வாரிசு முதல் வலிமை வரை! சாய் பல்லவி நிராகரித்த படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours