அத்துடன் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி உட்பட பல நட்சத்திரங்களுக்கும் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து வருகிறார். இந்திரஜாவும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மாப்பிள்ளை கார்த்திக்கும் திரைப்பட இயக்குநர் என்பதால் இவர்களுடைய திருமண நிகழ்வில் அரசியல் – வெள்ளித்திரை – சின்னத்திரை என முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் எனத் தெரிகிறது.

இந்திரஜா, திருமண வேலையில் பிஸியாக இருந்தாலும் அது குறித்த தகவல்களை உடனுக்குடன் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து விடுகிறார். பிரமாண்டமாக நடைபெற இருக்கும் இந்தத் திருமண நிகழ்வுக்காக இந்திரஜா – கார்த்திக்கின் ரசிகர்கள் பலரும் காத்திருப்பதாக கமென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
+ There are no comments
Add yours