போர்களில் கத்தியை வைத்துத்தான் சண்டையிடுவர், சில மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து மனித கணினிகளாகவும், மந்திரவாதிகளாகவும் இருப்பர். இவை பல ஆயிரம் ஆண்டுகள் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்கு ஒரு மத்திய காலத்தின் சாயலைக் கொடுக்கும். இப்படியான கதையம்சங்களைக் கொண்டு டியூன் சிருஷ்டிக்கும் உலகும், அதனுள் நடக்கும் சம்பவங்களும் இணையும் விதம்தான் இன்றும் டியூனை Sci-fi-ன் G.O.A.T ஆக வைத்துள்ளது.
1984-ல் இயக்குநர் டேவிட் லின்ச் (David Lynch) இயக்கத்தில் ‘டியூன்’ படமாக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. டியூன், ஓர் இயங்கிக் கொண்டிருக்கும் உலகம், எனவே அதன் அம்சங்களையும் சூழலையும் முறையாகக் காட்சிப்படுத்தத் தவறியதின் விளைவுதான் லிஞ்ச்சின் டியூன் தோல்வியாக முடிந்ததற்குக் காரணம். அதே சமயம் பரந்து விரிந்த அதன் கதை பரப்புக்கு ஏற்றவாறு 2000-ம் ஆண்டு இது ஒரு டிவி தொடராகவும் உருவாக்கப்பட்டது. நாவலின் பெரும்பாலான அம்சங்களை அது அப்படியே கொண்டிருந்ததால் ‘நேர்மையான தழுவல்’ எனப் பாராட்டப்பட்டது.
டியூனின் தற்போதைய ரீபூட் (2021), Denis Villeneuve (டெனிஸ் வில்லெநெவ்) இயக்கத்தில் இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டு, 2021-ல் முதல் பாகம் வெளியானது. இது டியூன் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு புது உலகைக் காணும் அனுபவத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தின் காட்சியமைப்பும் இசைக்கோர்ப்பும் டியூனை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வகையில் அமைந்திருந்தது. கதையின் அனைத்து அம்சங்களையும் புரியவைக்கக் காட்சிகளைத் திணிக்காமல், அவற்றைக் கதையுடன் கோர்வையாகக் காட்சிப்படுத்தியிருந்தார் டெனிஸ். அதன் விளைவு, டியூன் திரைப்படம், ‘அவதார்’ படங்களுக்கு நிகரான ஒரு திரையரங்க அனுபவத்தைக் கொடுத்தது.
+ There are no comments
Add yours