இந்த 11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மீண்டும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்திற்கு எதிராக நின்று நீதி கேட்டுச் சட்டப்போராட்டதைத் தொடர்ந்தார் பில்கிஸ் பானு. இந்த மேல்முறையீட்டில் தற்போது, “குஜராத் அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை மீறியிருக்கிறது. குற்றவாளிகள் 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்துவரும் நடிகை கங்கனாவிடம் நெட்டிசன் ஒருவர், “பெண்ணியம் குறித்து தொடர்ந்து பேசியும், படங்கள் எடுத்தும் வரும் நீங்கள் ஏன் பில்கிஸ் பானுவின் கதையைத் திரைப்படமாக எடுக்கக்கூடாது?” என்று கேட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த கங்கனா, “பில்கிஸ் பானுவின் கதையைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று மூன்று ஆண்டுகளாகத் தீவிரமாக ஆராய்ந்து ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டேன். ஆனால், அரசியல் ரீதியான பிரச்னைகள் இதில் இருப்பதாகச் சொல்லி நெட்ப்ளிக்ஸ், அமேசான் மற்றும் பிற தயாரிப்பு நிறுவனங்கள் என் கதையை நிராகரித்துவிட்டனர். “கங்கனா பிஜேபியை ஆதரிப்பதால் நாங்கள் அவருடன் வேலை செய்ய மாட்டோம்’ என்று ஜியோ சினிமாஸ் கூறிவிட்டது. இதைச் செய்ய எனக்கு வேறு வழி என்ன இருக்குறது?” என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
+ There are no comments
Add yours