Ethirneechal Kayal Siragadikka Aasai Tamil Serials TRP Rating List: தமிழ் சினிமாவிற்கு எந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ, அதே அளவிற்கு தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னர், தாயமார்களையும் குடும்ப தலைவிகளையும், மொத்தத்தில் பெண்களை மட்டும் கவர்ந்து வந்த தமிழ் தொடர்களின் ட்ரெண்ட், தற்போது மாறியிரு்க்கிறது. இளசுகள் முதல் பெருசுகள் வரை தற்போது எடுக்கப்படும் தமிழ் தொடர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து வருகின்றனர். பல தொலைக்காட்சிகள் இருப்பினும், அதிக டி.ஆர்.பியுடன் எப்போதுமே ‘சூரிய’ தொலைக்காட்சிதான் இருக்கிறது. இதில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களை நன்றாக கவர்ந்துள்ளன. அந்த வகையில், இந்த வாரம் எந்த சீரியல் டாப்பில் உள்ளது என்பதை பார்க்கலாமா?
5.வானத்தை போல:
ராஜ் பிரபு எழுத்தில், ராமச்சந்திரன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர், வானத்தை போல. இந்த தொடரில் ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சின்ராசு என்ற அண்ணனுக்கு துளசி என்ற தங்கைக்கும் இடையே நடக்கும் பாச போராட்டம்தான் இந்த தொடரின் கதை. இதில், முன்னாள் திரைப்பட வில்லன் நடிகர் மகானதி ஷங்கர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடர், இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்கில் 5வது இடத்தில் இருக்கிறது.
4.கயல்:
ஒற்றை ஆளாக குடும்ப சுமையை தூக்கி சுமக்கும்‘கயல்விழி’ என்ற பெண்ணின் கதையை வைத்து ஒளிபரப்பாகும் தொடர்தான், கயல். இதில், சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்து கொண்டிருக்கிறார். இந்த தொடரை பி.செல்வம் இயக்குகிறார். இந்த தொடருக்கு மக்களின் ஆதரவு வெகுவாக உள்ளது. இந்த வார டி.ஆர்.பியில் இத்தொடர் 4வது இடத்தில் இருக்கிறது.
மேலும் படிக்க | ஜீவன் நடித்துள்ள பாம்பாட்டம் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
3.சிறகடிக்க ஆசை:
சமீப காலங்களில் மக்களை அதிகம் கவர்ந்த தொடர்களுள் ஒன்று, சிறகடிக்க ஆசை. தளபதி நடிகரின் பெயரை வைத்த சேனலில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கோமதி பிரியா ஹீரோயினாகவும் வெற்றி வசந்த் கதாநயகனாகவும் நடித்து வருகின்றனர். திரைப்பட நடிகர் ஆர். சுந்தர் ராஜன் இந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக உள்ளார். இத்தொடர், டி.ஆர்.பி ரேட்டிங்கில் 3வது இடத்தில் இருக்கிறது.
2.சிங்கப்பெண்ணே:
பெண்களையும் அவர்களின் முன்னேற்றத்தையும் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் தொடர்களில் ஒன்று சிங்கப்பெண்ணே. இந்த தொடரில் மனீஷா மகேஷ் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இத்தொடர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஆனந்தி என்ற கிராமத்து பெண், சென்னையில் வந்து தங்கி வேலை பார்க்கையில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறாள் என்பதை வைத்து இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த தொடர், டி.ஆர்.பியில் 2வது இடத்தை பெற்றிருக்கிறது.
1.எதிர்நீச்சல்:
சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நடிகர், மாரிமுத்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த தொடர், எதிர்நீச்சல். இந்த தொடரை திரு செல்வம் இயக்கி வருகிறார். பெண்களை அடக்குமுறை படுத்த நினைப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது இந்த தொடர். இதில் ஹைலைட்டாக இருந்த ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில்தான் மாரிமுத்து நடித்து வந்தார். இவர் உயிரிழந்ததை அடுத்து, வேல ராமமூர்த்தி இந்த கதாப்பாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த மாற்றத்திற்கு பிறகு, இத்தொடரின் டிஆர்பி சரிந்து கொண்டிருந்த நிலையில், தற்போது எதிர்நீச்சல் தொடர் மீண்டும் முதல் இடத்தில் வந்து நிற்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours