இந்தப் படத்தின் வெற்றி அடுத்தடுத்த படவாய்ப்புகளை உருவாக்கித் தர, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘ஹாய் நான்னா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ‘ஃபேமிலி ஸ்டார்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்திப் படங்களிலும் நடிக்கும் மிருணாள் தாக்கூர் இந்திப் பட இயக்குநர்களிடம் தனது திறமையை நிரூபித்துச் சோர்வடைந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “”சீதாராமம்’, ‘ஹாய் நான்னா’ போன்ற காதல் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. ‘ரொமான்ஸ் குயின்’ என்று என்னை அழைத்ததில் சந்தோசமடைகிறேன். இந்தியில் காதல் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், அதுபோன்ற கதைகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஒருவேளை, காதல் கதைகளில் நடிக்கும் அளவுக்கு நான் பிரபலமாகவில்லையா என்று தெரியவில்லை. என் நடிப்புத் திறமையை இந்தி இயக்குநர்களிடம் இதற்கு மேல் எப்படி நிரூபிக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. அதில் நான் சோர்வடைந்து விட்டேன்” என்று மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours