இந்த வாரம் “ஆர்டிகிள் 370′ பற்றிய படம் ஒன்று வெளியாவதாகக் கேள்விப்பட்டேன். மக்கள் உண்மையான தகவல்களைத் தெரிந்துகொள்ள இப்படம் உதவும் என்பது நல்ல விஷயம்” என்று கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தில் நடித்த யாமி கௌதம், பிரதமர் மோடிக்குத் தனது ட்வீட் மூலம் நன்றியைத் தெரிவித்திருக்கிறார். “ஆர்டிகிள் 370 படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதைப் பார்க்கும்போது மிகச்சிறப்பாக இருந்தது. உங்கள் எதிர்பார்ப்புகளை நானும் எனது படக்குழுவினரும் பூர்த்தி செய்வோம் என்று நம்புகிறேன்” என அவரது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதே சமயம், காஷ்மீர் பிரச்னை குறித்த உண்மையைப் படமாக்குகிறேன் என்பதாக ‘அந்த முடிவு சரியே’ என்பதை நிறுவ முயலும் பிரசாரப் படமாக இது உருவாகியிருப்பதாக ஒரு தரப்பினர் எதிர்க்கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours