அஞ்சாம் வேதம் : தமிழில் வெளியாகும் மலையாள படம்

Estimated read time 1 min read

அஞ்சாம் வேதம் : தமிழில் வெளியாகும் மலையாள படம்

19 பிப், 2024 – 10:57 IST

எழுத்தின் அளவு:


Anjam-Vedam-:-A-Malayalam-film-released-in-Tamil

மலையாளத்தில் தயாராகி உள்ள ‘அஞ்சாம் வேதம்’ என்ற படம் வருகிற 23ம் தேதி தமிழிலும் வெளியாகிறது. இதனை அறிமுக இயக்குனர் முஜீப் டி.முகமது இயக்கி உள்ளார். அய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். புதுமுகம் விஹான் விஷ்ணு நாயகன். நயன்தாராவின் ‘அறம்’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான சுனு லட்சுமி நாயகி. சிரித்தால் ரசிப்பேன், செங்காத்து பூமியிலே, எப்போதும் வென்றான், டூரிங் டாக்கீஸ், தாரவி சங்கத் தலைவன் உள்ளிட்ட படங்களில் சுனு லட்சுமி நடித்துள்ளார். இவர்கள் தவிர சஜித்ராஜ், பினிஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனுர் முஜிப் கூறும்போது “இந்த படம் பல வகையான திரை அம்சங்கள் அடங்கிய படமாகும். இது அதன் கதைக்களத்தில் பல்வேறு மர்மமான முடிச்சுகளையும், புதிர்களையும், திருப்பங்களையும் கடந்து செல்கிறது. இந்தப் படம் ஒரு குடும்பத்தில் மதம் நுழைந்து ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி பேசுகிறது. மதம் சார்ந்த சித்தாந்தம் , நம்பிக்கைகள், அடிப்படைவாதம், வன்முறை போன்றவை குடும்ப வாழ்க்கையில் நுழைந்து அவை ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன என்பதைப் பற்றியும் பேசுகிறது. அதனால் அந்தக் குடும்பத்தில் குழப்பங்கள், விவாகரத்து, கொலை வரை விரும்பத்தகாதவை பலவும் நிகழ்கின்றன. ஒரு குடும்பத்தில் மதம் நுழைந்து அதன் இயல்பில் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகளைப் பற்றித் துணிவாக இப்படம் பேசுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் மலைப்பாங்கான பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது” என்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours