யோகி பாபு நடிக்கும் ‛கிணத்த காணோம்’
18 பிப், 2024 – 13:26 IST

கடந்த 2017ல் வெளிவந்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுரேஷ் செங்கையா. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இவருக்கு அடுத்த பட வாய்ப்பு சற்று தாமதமாக கிடைத்தது. சமீபத்தில் நடிகர் பிரேம்ஜியை வைத்து ‘சத்திய சோதனை’ என்கிற படத்தை இயக்கி இதுவும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
தற்போது தனது மூன்றாவது படத்தை இயக்கும் வாய்ப்பை உடனே பெற்றுள்ளார் சுரேஷ் செங்கையா. யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ‘கிணத்த காணோம்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
+ There are no comments
Add yours