வரும் மார்ச் மாதம் நடைபெறும் 96-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிக்கட்ட பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி 8ம் தேதி நடைபெற்ற 81வது குளோப் விருதுகள் விழாவில் ‘Oppenheimer’, ‘Killers of the Flower Moon’, ‘Barbie’, ‘Poor Things’, ‘Anatomy of a Fall’ உள்ளிட்ட திரைப்படங்கள் பல விருதுகளைத் தட்டிச் சென்றன. கிறிஸ்டோபர் நோலன், கிலியன் மர்பி, எம்மா ஸ்டோன், லில்லி கிளாட்ஸ்டோன் உள்ளிட்டோர் விருதுகளை வென்றிருந்தனர்.

கோல்டன் குளோப் விருதுகளை வென்ற திரைப்படங்கள் இந்த 96வது ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சென்ற முறை இந்தியாவிலிருந்து ‘RRR’, ‘The Elephant Whisperers’ ஆவணப்படம் ஆஸ்கர் விருதுகளை வென்றிருந்தன. இந்த முறை இந்தியத் தயாரிப்புகள் இறுதிக் கட்டத்துக்குத் தேர்வாகாதது ஏமாற்றமே!
இந்நிலையில் 96-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிக்கட்ட பரிந்துரைப் பட்டியல் இடம்பெற்ற படங்கள் இவைதான்…























இவற்றில் ‘Oppenheimer’ 13 விருதுகளுக்கும், ‘Poor Things’ 11 விருதுகளுக்கும், ‘Killers of the Flower Moon’ 10 விருதுகளுக்கும், ‘Barbie’ 8 விருதுகளுக்கும், ‘Maestro’ படம் 7 விருதுகளுக்கும் தேர்வாகியுள்ளன. இந்தியாவில் பிறந்த இயக்குநர் நிஷா பஹுஜா இயக்கிய ‘To Kill a Tiger’ திரைப்படம் ‘சிறந்த ஆவணப்படம்’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இது கனடா நாட்டுத் தயாரிப்பாகும்.

இப்படம் ஜார்கண்ட்டைச் சேர்ந்த இந்திய விவசாயி தன் வாழ்கையில் சந்திக்கும் பிரச்னைகளையும், கொடூரமான கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தனது 13 வயது மகளுக்கு நீதி கேட்டுப் போராடும் அவரது போராட்டத்தையும் மையப்படுத்தியது. ஏற்கெனவே பல விருதுகளை வென்ற இந்த ஆவணப்படம் ஆஸ்கரை வெல்லுமா என்பதைப் பார்போம்.
இறுதிப் பரிந்துரைப் பட்டியல் என்றால் சர்ச்சை இல்லாமலா? இந்த முறை ‘பார்பி’ படத்தை இயக்கிய பெண் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் பெயர் சிறந்த இயக்குநருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை. இது பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அதே சமயம், ‘சிறந்த படம்’ பிரிவில் 3 பெண் இயக்குநர்களின் படங்கள் இடம்பெறுவது இதுவே முதன் முறை! அதற்காகப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இந்த முறை எந்தப் படம் அதிக ஆஸ்கர் விருதுகளை வெல்லும்? உங்களின் கணிப்பை கமென்ட்டில் சொல்லுங்கள்.
+ There are no comments
Add yours