"இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து வருகிறது; `அவதார்' ஏழு பாகங்களாக வரும்!" – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்

Estimated read time 1 min read

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான `அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைத் திரைப்படம். 

இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை நான்கு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில் அதன் இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ 3டி தொழில்நுட்பத்துடன் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியிருந்தது. இதையடுத்து இதன் அடுத்தடுத்தப் பாகங்களுக்கானப் பணிகள் நடந்து வருகின்றன. மூன்றாம் பாகம் 2025 ஆண்டு வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது.

51st Saturn Awards | ஜேம்ஸ் கேமரூன்

இந்நிலையில் லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெறும் 51வது ‘Saturn Awards’ விருது விழாவில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜேம்ஸ் கேமரூன், ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் குறித்தும் ‘அவதார்’ படத்தின் உருவாக்கம் குறித்தும் பேசியுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள அவர், “ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உண்மையில் அற்புதமான படைப்பு. இந்திய சினிமா உலக அரங்கில் உயர்ந்து வருகிறது” என்று பாராட்டினார். கடந்த ஆண்டு ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ‘Critics’ Choice Awards’ விருதினை வென்றபோதும் ஜேம்ஸ் கேமரூன், இயக்குநர் ராஜமெளலியை மனம் திறந்து பாராட்டிப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் கேமரூன், ராஜமெளலி

‘அவதார்’ படத்தின் உருவாக்கம் குறித்து ஜேம்ஸ் கேமரூன், “ஐந்து பாகங்களுக்கான ஸ்கிரிப்டை முழுமையாக எழுதிவிட்டோம். இதை ஏழு பாகம் வரை எடுக்கும் திட்டமிருக்கிறது” என்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours