பாமரர்கள் இருக்குற சபைல பாமரனுக்கும் பாமரனா பேசுவாரு. அறிஞர்கள் இருக்குற சபைல அறிஞருக்கும் அறிஞரா பேசுவாரு. முன்னாடி ஒரு தடவை என்னோட இத்தாலியன் பியட் காரை எடுத்துக்கிட்டு ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் விட்ற நேரத்துக்கு கையில் சிகரெட் வச்சுக்கிட்டு போய் நின்னேன். அப்ப பின்னாடி சில காருங்க வந்துச்சு. யாருன்னு பார்த்தா கலைஞர் கார். சிகரெட்ட தூக்கிப் போட்டு ஓரமா போனேன். அப்ப அந்த கார் என் முன்ன வந்து கொஞ்சம் மெதுவாச்சு. கண்ணாடி இறங்குச்சு. ரஜினின்னு ஒரு சிரிப்பு சிரிச்சாரு கலைஞர். அந்தச் சிரிப்பு இன்னும் ஞாபகம் இருக்கு.
ஒரு பெரிய எழுத்தாளர். கம்யூனிஸ்ட். அவருக்கு தி.க-ன்னா பிடிக்காது. கலைஞர்னா பிடிக்காது. கடுமையா விமர்சனம் பண்ணுவாரு. ஆனா, அவர் வயசான காலத்துல அவரோட சிகிச்சைக்கு கலைஞர்தான் உதவி பண்ணாரு. அந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.
ஒரு தயாரிப்பாளர் கலைஞரோட தீவிர ரசிகன். அவர் கூட ஒரு படம் பண்ணினேன். அந்தத் தயாரிப்பாளர், ‘நம்ம படம் கண்டிப்பா சூப்பர் ஹிட்… கலைஞர் நமக்கு வசனம் எழுதித்தரேன்னு சொல்லிருக்காரு’னு சொன்னாரு. அப்போ நான், கலைஞரோட வசனங்கள் கஷ்டமாக இருக்கும். நான் கலைஞர் வசனம் பேசமாட்டேன்னு சொல்லிட்டேன்.
நானே கோபாலபுரம் போய் கலைஞர்க்கிட்ட, ‘உங்க வசனத்தை என்னால பேச முடியாது, கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்’னு சொன்னேன். அதுக்கு அவர் தயாரிப்பாளரை கூப்பிட்டு, ‘ரஜினி என் வசனம் பேசுறதுக்கு கஷ்டமாக இருக்கும்னு சொன்னாரு. நான் ரஜினிகிட்ட அவனுக்குகேத்த மாதிரி எழுதுறேன்னு சொன்னேன். ஆனா, ஷூட்டிங் அடுத்த மாதாமமே. நான் அதுக்கு அடுத்த மாதம்னு நினைச்சேன். நீ வேற யாரையாவது வச்சு வசனம் எழுதிக்கோ’னு அவர்கிட்ட சொன்னார். சொல்லிட்டு என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சாரு.
ஒரு எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். இந்தியா முழுக்க அவருக்கு அரசியல் தொடர்பு உண்டு. கலைஞரை விமர்சிச்சே பத்திரிகை நடத்துனவரு அவரு. அவர் என்க்கிட்ட ஒரு நாள், ‘கலைஞரை எவ்ளோ விமர்சனம் பண்றேன். ஆனா, எங்க பார்த்தாலும் என்னய்யா எப்படி இருக்கன்னு கேட்குறாரு…’ன்னு நெகிழ்ந்து போய் சொன்னாரு. அவர் பத்திரிகையாளர் மற்றும் என்னுடைய நண்பர் சோ.
+ There are no comments
Add yours