“தி குட் ஜெர்மன்’, ‘ஸ்பீட் ரேசர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் கிறிஸ்டியன் ஆலிவர். அவர் தனது இரண்டு மகள்களுடன் கிழக்கு கரீபியனில் உள்ள பெக்கியாவிற்கு அருகில் உள்ள தனியார் தீவான பெட்டிட் நெவிஸ் என்ற தீவிற்கு புத்தாண்டு கொண்டாட தனி விமானத்தில் சென்றிருக்கிறார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கரீபியன் தீவிற்கு அருகே விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் 51 வயதான கிறிஸ்டியன் ஆலிவர், அவரது இரு மகள்களான மடிதா (10), அன்னிக் (12) மற்றும் விமானி ராபர்ட் சாக்ஸ் ஆகிய நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள மீனவர்கள் இந்த விபத்து பற்றி கடலோர காவல்படையினருக்குத் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு நால்வரையும் சடலமாக மீட்டுள்ளனர். தற்போது கிறிஸ்டியன் ஆலிவர் மற்றும் அவரது இரு மகள்களின் மறைவிற்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். ஆலிவர் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours