12th Fail: “படப்பிடிப்பில் கட் சொன்ன போதும் அழுதுகொண்டேதான் இருந்தேன்!” – விக்ராந்த் மாஸ்ஸி | ’12th Fail’ movie actor Vikrant Massey opens up about portraying Manoj Kumar Sharma

Estimated read time 1 min read

கொள்ளையர்களின் பூமி என்ற குறுகிய பார்வையில் மட்டுமே அணுகப்படும் சம்பல் பள்ளத்தாக்கில் பிறந்து ஐ.பி.எஸ் அதிகாரியாக உயர்ந்த மனோஜ் குமார் சர்மாவின் வாழ்க்கையை மையப்படுத்திய இப்படம் பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்து நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தியேட்டரில் பெரும் வெற்றியடைந்த இப்படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் படத்தைப் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர்.

'12th Fail' பட படப்பிடிப்பின்போது இயக்குநர் விது வினோத் சோப்ரா, விக்ராந்த் மாஸ்ஸி

’12th Fail’ பட படப்பிடிப்பின்போது இயக்குநர் விது வினோத் சோப்ரா, விக்ராந்த் மாஸ்ஸி

இப்படத்தில் மனோஜ் குமார் சர்மாவாக நடித்த விக்ராந்த மாஸ்ஸி, இயக்குநர் விது வினோத் சோப்ரா, ஷ்ரத்தா ஜோஸியாக நடித்த மேதா ஷங்கர் என மொத்தப் படக்குழுவினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி, “திரைப்படத்தில் மனோஜ் குமார் சர்மாவாக நடித்தது மனதளவில் என்னைப் பெரிதும் பாதித்தது. படப்பிடிப்பின்போது இயக்குநர் விது வினோத் சோப்ரா கட் சொன்னாலும், நான் அழுது கொண்டேதான் இருப்பேன். என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரம் என்னைப் பாதித்தது” என்று கூறியுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours