அந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 2014-ம் ஆண்டு இயக்குநர் விஜய்யைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். விவாகரத்திற்குப் பிறகு அமலா பால் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். அவர் நடித்த ‘ஆடை’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. தற்போது மலையாளத்தில் பிருத்விராஜுடன் ‘ஆடு ஜீவிதம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் அதாவது கடந்த வருடம் நவம்பர் 6 ஆம் தேதி ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படங்களைப் பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அமலா பால்- ஜகத் தேசாய் ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours