தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது ‘கேப்டன் மில்லர்’. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில், நீண்ட நாளுக்குப் பிறகு தனுஷை, மீண்டும் ஒரு ஆக்ரோஷமான ஆக்ஷன் ஹிரோவாகத் திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் தனுஷ், “2002 -ம் ஆண்டிலிருந்து நான் சிறுகச் சிறுக சேர்த்த துளிகள் எல்லாம் இன்றைக்குப் பெரும் வெள்ளமாகத் திரண்டு வந்திருக்கீங்க. ‘கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்’ இந்தப் படத்தை பற்றி நினைத்ததும் நம்ம நினைவுக்கு வருவது ‘உழைப்புதான்’. அவ்ளோ உழைப்பு இதுல இருக்கு. இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன். ‘You’ll be the devil, I’m the devil’.
அதுக்கு உண்மையானக் காரணம் அருண் மாதேஸ்வரன்தான். அருண் மற்றும் இந்த படக்குழுவினரோட உழைப்பைப் பார்த்ததும், நான் கஷ்டப்பட்டேன்னு சொல்லக் கூச்சமா இருக்கு.
‘அருண்’, ‘வெற்றி மாறன்’ என நான் சில இயக்குநர்களோட தொடக்கத்துல இருந்து வேலை பார்த்திருக்கிறேன்.
என்கிட்ட ஒரு கதை இருக்குன்னு வெற்றிமாறன் சொன்னார். அப்படி ஒரு திறமை அவருக்கு இருந்தது. அதே திறமை அருண்கிட்டயும் இருக்கு.
‘கேப்டன் மில்லர்’ படத்தோட லைனை 15 நிமிடங்கள் சொன்னாரு. படம் பெரிய ஸ்கேலில் இருந்தது. ஆக்ஷன் காட்சிகள் பண்ணிட முடியுமான்னு கேட்டேன். ‘ஹ்ம்ம்’ பண்ணிடலாம்னு சொன்னாரு. இப்போ படம் பார்த்தேன் ரொம்ப நல்லா வந்திருக்கு. அப்போதான் தெரிஞ்சது அருண் சம்பவம் பண்ணப்போற கைன்னு… இந்தப் படம் மூலமாக உங்களுக்குன்னு ஒரு பெரிய பேர் கிடைக்கும். இதே அரங்கத்துல உங்களுக்குக் கரவொலிகள் எழும்பும்” என்று இயக்குநர் அருண் மாதேஸ்வரனை வாழ்த்தினார் .
வெற்றி மாறான் உடனான முதல் சந்திப்பு:
” ‘பொல்லாதவன்’ சமயத்துல க்ளைமேக்ஸ்ல ஒரு சீன் மாத்தணும்னு ஒரு மியூசிக் டைரக்டர் சொன்னார். அதை மாத்துறதுக்கு வெற்றி மாறன் விருப்பம் இல்லைன்னு சொன்னாரு. நான் இசையமைப்பாளரை மாத்திடலாம்னு சொன்னேன்.
அப்போ ‘வெயில்’ படத்தோட பாட்டு கேட்டேன் ‘உருகுதே மருகுதே’ பாடல் நல்லா இருக்கு அந்த இசையமைப்பாளரை போடலாம்னு சொன்னேன். எப்போ போன் பண்ணாலும் ‘ சொல்லு மச்சான்’னு ஜி.வி.பிரகாஷ் சொல்லுவாரு. அவை நாகரிகம் கருதி அவர் இவர்னு நாங்க வெளியில பேசிக்குவோம்” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய தனுஷ், “ஏதோ ஒன்னு சரியாப் பண்றேன்னு நீங்க என்னைய மோட்டிவேட் பண்றீங்க. உங்களோட பணிவு எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு வீட்டு சாப்பாடு கிடைக்கலைன்னு சொன்னதும் வசதி இல்லாம இருந்த சின்ன அறையிலயும் எனக்கு சிவாண்ணாவோட மனைவி சமைச்சுக் கொடுத்தாங்க.
இந்த படத்தோட கடைசி 30 நிமிடத்தைப் பார்க்கும் போது எனக்கு திருப்தியா இருந்தது. உங்களுக்கும் அதேதான் தோணும்னு நினைக்கிறேன். கேப்டன் மில்லர் டேக் லைன் ‘Respect is freedom’.
யாருக்கு இங்க சுதந்திரம், மரியாதை இருக்குன்னு தெரியல. எதைப் பேசினாலும் பார்த்துப் பார்த்து பேச வேண்டியதா இருக்கு. ‘கேப்டன் மில்லர்’ ஒரு சர்வதேசப் படமாக இருக்கும். ‘Linear, non-linear’ தாண்டி பெருசா ஒரு விஷயம் அருண் பண்ணியிருக்காரு.
வடசென்னை 2-ம் பாகம், வரும் கண்டிப்பாக வரும். இத்தனை உள்ளங்கள் கேட்கும்போது கண்டிப்பாக வரும். மாரி செல்வராஜ் பண்றது ரொம்ப பெரிய விஷயம். அவர் மேல மரியாதை அதிகமாகிட்டே இருக்கு” என்றவர் ” ‘எண்ணம் போல் வாழ்க்கை! எண்ணம் போல்தான் வாழ்க்கை'” என்று பேசி முடித்தார்.
‘Rapid fire’ கேள்விகள்:
Failure – வந்தா அதை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கணும்
Friendship- ஜீ.வி மாதிரி இருக்கணும்.
Social media – மிகப்பெரிய காலத்திருடன்… ‘Social media’ ஒரு திருடன். உங்களுக்குத் தெரியாம உங்களோட மணித்துளிகளைத் திருடுது. பக்கத்துல யாரவது இருந்தாங்கனா, அவங்க முகத்தைப் பார்த்துப் பேசுங்க. ‘Social Media’வையே பார்த்துட்டு இருக்காதிங்க.
Mental health – ‘its not joke’. அன்பால மட்டுமே அணுகி அன்பால மட்டுமே அதைச் சரி செய்ய முடியும். எதையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக்கக் கூடாது .
Success – (ரசிகர்களை நோக்கி) இவங்கதான் என் சக்சஸ். நான் கீழ இருக்கும் போது எல்லாரும் கை காமிக்கச் சொன்னாங்க. எனக்கு அதை காமிக்கத் தெரியாதா, அந்த சத்தத்தைக் கேக்கணும்னுதான் கொஞ்ச நேரம் காத்திருந்தேன்.
கடைசியாக ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ பாடலை ரசிகர்களுக்காக மேடையில் பாடிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார் தனுஷ்.
+ There are no comments
Add yours