Captain Miller: "'ஜெயிலர்' படத்துக்குக் கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி" – சிவராஜ் குமார் நெகிழ்ச்சி!

Estimated read time 1 min read

பொங்கலுக்குத் திரைக் காணவுள்ள ‘கேப்டன் மில்லர்’ பட விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி வருகிறது. பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘ஜெயிலர்’ படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்து கோலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிவராஜ் குமார்

இன்று நடைபெற்று வரும் ‘கேப்டன் மில்லர்’ பட விழாவில் கலந்துகொண்டு பேசிய சிவராஜ்குமார், “அருண் கதையே சொல்லலைனாலும் நான் தனுஷ் நடிக்கிறார்னு தெரிஞ்சாலே ஓகே சொல்லியிருப்பேன். தனுஷை அவரோட முதல் படத்துல இருந்து எனக்குப் பிடிக்கும். தனுஷ் எனக்காக ஒரு பாடலும் பாடியிருக்காரு. தனுஷ் பசங்களோட கிரிக்கெட் விளையாடினேன். ‘ஜெயிலர்’ படத்துக்குக் கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி” என்றார்.

இதையடுத்து ‘Rapid fire’ கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.

கேள்வி: எந்த தமிழ் படத்தை கன்னடத்தில் ரீ-மேக் செய்ய ஆசை?

பதில்: ‘அசுரன்’ படத்தை எனக்கு கன்னடத்தில் ரீமேக் பண்ணும்னு ஆசை.

சிவராஜ் குமார்

கேள்வி: ‘Hugs and Kiss’ யாருக்குக் கொடுப்பீங்க?

பதில்: Hugs – தனுஷுக்குதான். அதைவிட்ட அருணுக்கு, ஜி.விக்கு Kiss.

கேள்வி: தனுஷ் சாரோட எந்தப் பாடலின் டான்ஸ் பிடிக்கும்?

பதில்: ‘பொல்லாதவன்’ படத்துல வர்ற ‘மின்னல்கள் கூத்தாடும்’ பாடல்ல தனுஷோட ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours