காதலை உணர வைக்கும் ‘காத்து வாக்குல ஒரு காதல்’
03 ஜன, 2024 – 14:53 IST
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன் தயாரிக்கும் படம் ‘காத்து வாக்குல ஒரு காதல்’. மாஸ் ரவி பூபதி நடித்து இயக்கி உள்ளார். நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, கபாலி விஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜதுரை, சுபாஷ், மணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். ஜிகேவி இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் மாஸ் ரவி பூபதி கூறும்போது “காற்றை யாரும் பார்க்க முடியாது, உணர மட்டும்தான் முடியும். காதல் கருப்பா சிவப்பா பார்க்க முடியாது, சுவாசிக்க தான் முடியும். இரண்டு பேருக்குள் நடக்கும் உண்மையான காதலை சுற்றி படம் உருவாகியுள்ளது. வடசென்னை பின்னணியில் தற்போது சமூக வலைத்தளத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் படமாக்கி இருக்கிறோம். ரசிகர்களுக்கு ஏற்ப காதல், காமெடி, ஆக்ஷன், திரில்லர், எமோஷனல் என கமர்ஷியல் அம்சத்துடன் தயாராகி உள்ளது” என்றார்.
+ There are no comments
Add yours