Rambha Talks About Rajinikanth Playing Pranks With Her On Arunachalam Movie Shooting

Estimated read time 1 min read

Rambha Talks About Rajinikanth Playing Pranks With Her On Arunachalam Movie Set: அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்த ரம்பா, அந்த படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு ரஜினியுடன் ஏற்பட்ட அனுபவத்தை ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

அருணாச்சலம் படத்தில் சேர்ந்து நடித்த ரம்பா-ரஜினி..

1997ஆம் ஆண்டு வெளியான கமர்ஷியல் படம், அருணாச்சலம். இந்த படத்தில் ரஜினிகாந்த் (Rajinikanth Arunachalam) ஹீரோவாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை சௌந்தர்யா நடித்திருந்தார். நடிகை ரம்பா, இதில் முக்கிய கதாப்பாத்திரமாக வருவார். இந்த படத்தில் நடித்த போது, ரஜினி தன்னிடம் விளையாட்டாக ப்ராங்க் செய்த சம்பவத்தை ரம்பா பகிர்ந்துள்ளார். 

ரஜினி செய்த குறும்பு..

நடிகர் ரஜினி, ரம்பாவுடன் (Rambha and Rajinikanth Movie) அருணாச்சலம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது ஒரு நாள் திடீரென லைட் எல்லாம் அணைந்து விட்டதாம். அப்போது ரம்பாவின் முதுகில் யாரோ தட்டியது போல அவர் உணர்ந்து, உடனே கத்தியுள்ளார். லைட் திரும்ப வந்தவுடன் ‘யார் ரம்பாவை தொட்டது’ என்று அனைவரையும் நிற்க வைத்து கேள்வி கேட்டுள்ளனர். பின்னர், அது ரம்பாவை பயமுறுத்த ரஜினிகாந்த் செய்த வேலைதான் என்று தெரியவந்துள்ளது. 

ரஜினி, இவ்வாறு செய்ததை ரம்பா தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இது, தற்போது பெரிய டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. சும்மாவே ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஒத்து வராத இந்த சமயத்தில், கொதித்தெழுந்த விஜய் ரசிகர்கள் சிலர் ரம்பா கூறிய இந்த விஷயத்தை வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | தனக்கு தாயாக நடித்தவரையே காதலித்த கமல்ஹாசன்! எந்த நடிகை தெரியுமா?

Rajinikanth And Rambha

சல்மான் கானை கட்டிப்பிடித்த ரம்பா..கடுப்பான ரஜினி..

ரம்பா, ரஜினி செய்த இன்னொரு குறும்பான விஷயத்தையும் அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். சல்மான் கான் ஒரு முறை அருணாச்சலம் படத்தின் படப்பிடிப்பிற்கு ரஜினிகாந்தை காண வந்துள்ளார். அப்போது அவரை வரவேற்ற ரம்பா, ஓடிச்சென்று கட்டிப்பிடித்துள்ளார். இதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த ரஜினி, ரம்பாவிடம் “எங்க கிட்ட மட்டும் குட் மார்னிங் சார்..என்று சொல்ற..அவங்க வந்தா மட்டும் ஓடி போய் கட்டிப்பிடிக்கிற..இனிமே யூனிட்ல யார் வந்தாலும் அவங்கள இப்படித்தான் வரவேற்கனும்” என்று குறும்பாக கலாய்த்துள்ளார். இதை நினைவு கூர்ந்த ரம்பா, “அவர் இப்படித்தான் செல்லமாக குறும்பு செய்வார்” என்று கூறியுள்ளார் (Rajinikanth Pranks On Rambha). 

சினிமாவில் ரீ-எண்ரிக்கு தயாரான ரம்பா..

நடிகை ரம்பா, 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னிகளுள் ஒருவராக இருந்தார். இவரை பலர் ‘தொடையழகி’ என்ற பட்டத்துடன் அழைத்ததும் உண்டு. திரைக்கு வந்த சில வருடங்களிலேயே மளமளவென வளர்ந்து இந்தி மற்றும் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார், ரம்பா. 2010ஆம் ஆண்டு வரை திரையுலகில் ஆக்டிவாக இருந்த இவர், அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

ரம்பா, மீண்டும் திரையுலகிற்குள் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர் நடித்த காலத்தில் இவருடன் சக நாயகிகளாக இருந்தவர்கள் தற்போது சினிமாவில் துணை கதாப்பாத்திரங்களாகவும், அம்மா அல்லது அண்ணி கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். இது குறித்து மனம் திறந்துள்ள ரம்பா, தனக்கு ஏற்ற கதை அமைந்தால் மீண்டும் நடிக்க வருவேன் (Rambha Re-Entry In Tamil Cinema) என கூறியிருந்தார். 

மேலும் படிக்க | வெளிநாட்டு ரசிகையுடன் நடனமாடும் அஜித்குமார்! வீடியோ இதோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours