பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மகள் இரா கானுக்கு லாக்டௌன் காலத்தில் உடற்பயிற்சியாளர் நுபுர் சிகாரே என்பவர் பிட்னஸ் ஆலோசனைகளை வழங்கினார். அதோடு இரா கான் மன அழுத்தத்தில் இருந்தபோது அவருக்குப் பக்கபலமாக இருந்து அதிலிருந்து வெளியில் வரத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இதில் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் மூன்றாம் தேதி இருவருக்கும் மும்பை பாந்த்ரா தாஜ் லேண்ட் ஹோட்டலில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குத் தேவையான நகைகள் மும்பை மாட்டுங்காவில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் வாங்கப்பட்டுள்ளன.
இத்திருமணத்திற்காக ஆமிர் கான் பாலிவுட் பிரபலங்களுக்கு நேரிலும் போனிலும் அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் இப்போது விடுமுறைக் காலம் என்பதால் பெரும்பாலான நடிகர்கள் விடுமுறையைக் கழிக்க வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். எனவே திருமண வரவேற்பில் கலந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். திருமண சடங்குகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில் 3ம் தேதி மராத்தியப் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெறுகிறது.
+ There are no comments
Add yours