நான் படம் பண்றேன். ஆனா, ஒரு கண்டிஷன். ஷூட்டிங் முடியுற வரைக்கும் நீ தான் ஸ்பாட்டுக்கு வரணும்னு சொன்னார். அது ஏன் சொன்னார்னுலாம் தெரியல.. நானும் சரின்னு சொல்லி அவர் கூடப் போய் முழுப் படத்தோட ஷூட்டிங்கும் பார்த்தேன். அந்தப் படத்துடைய பெயர் `மாநகர காவல்’. ஒவ்வொரு சீன்லயும் ஆக்டர் யாராவது இல்லைன்னா `ஶ்ரீதர் இருக்கான்ல அவனைக் கூப்பிடு’னு சொல்லிட்டே இருப்பார். சார் நான் உண்டு என் கணக்கு உண்டுன்னு இருக்கேன் ஏன் சார் என்னை இழுத்துவிடுறீங்க?னு ஒருமுறை அவர்கிட்ட கேட்டேன். `நான் உன்னை கவனிச்சு தான் சொல்றேன்.. உனக்குள்ள நடிப்புத் திறமை இருக்கு.. அதனால தான் நான் உனக்கு வாய்ப்பு கொடுக்க சொல்றேன். இல்லைன்னா நான் ஏன் சொல்லப் போறேன்? எவ்ளோ பேர் இந்த வாய்ப்புக்காக என்கிட்ட கேட்டுட்டு இருக்காங்க. நீ பெரிய நடிகனாவேன்னு எனக்கு தோணுது. என் கணிப்பு எப்பவும் சரியாதான் இருக்கும்’னு சொன்னார். அந்தப் படத்துல முக்கியமான கேரக்டர் ஒண்ணு நடிக்கச் சொல்லி சொன்னார்.
அப்போ, `சார் இந்தப் படத்துல ஒரு வேலை தான் பார்க்கணும், நான் ஆடிட்டிங் முழுசும் பார்த்துட்டு இருக்கேன். அடுத்தப் படம் நீங்க பண்ணும்போது முக்கியமான ஒரு கேரக்டர் கொடுங்க நான் பண்றேன்’னு சொன்னேன். நடிக்க வேண்டாங்கிறதுக்கு இப்படி சொல்லிட்டா முற்றுப்புள்ளி வச்சிடலாம்னு அப்போதைக்கு சொல்லிட்டு அந்தப் படத்துடைய வேலைகளை கவனிச்சேன். அந்தப் படத்துடைய கடைசி நாள் ஷூட்டிங்ல ஒரு டைரக்டர் என்கிட்ட கதை சொன்னார். `சத்ரியன்’ பட டைரக்டர் அவர். `கதை கேட்டீயா?’னு கேட்டார். கேட்டேன்.. நல்லா இருக்குனு சொல்லவும், `நீ தான் அந்தக் கேரக்டர் பண்ணனும்!’னு சொன்னார். மூணு நாள் ஷூட்டிங்னு சொன்னாங்க. `மாநகர காவல்’ படத்துடைய ஒர்க் முடிக்காம என்னால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டேன்.
+ There are no comments
Add yours