Best South Indian Ott Series Of 2023 Where To Watch Good Tamil Dramas Online

Estimated read time 1 min read

2023ஆம் ஆண்டு இன்னும் வெகு சில நாட்களில் முடிவடைய உள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மட்டுமன்றி, தென்னிந்திய அளவில் மக்களுக்கு பிடித்த பல நல்ல படைப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றில் பல வெப் தொடர்களும் உள்ளன. அந்த படைப்புகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாமா? 

மாடர்ன் லவ்:

தமிழ் ரசிகர்களுக்கு, இரண்டரை அல்லது மூன்று மணி நேர திரைப்படங்கள் எந்த அளவிற்கு பிடித்திருக்கிறதோ, அதே போல சில நிமிடங்களே ஓடும் ஆந்தாலஜி படங்களும் பிடித்துள்ளது. இந்த ஆண்டு வெளியான ‘மாடர்ன் லவ்’ படத்தில் சென்னயில் நிகழும் காதல் கதைகளை படமாக உருவாக்கியிருந்தனர். இந்த படங்களில் அசோக் செல்வன், ரிது வ்ர்மா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பாரதி ராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூ முருக, தியாகராஜ குமாரராஜா உள்ளிட்ட பல பிரபலமான இயக்குநர்கள் இந்த படங்களை இயக்கியிருந்தனர். இளையராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், சியான் ரோல்டன் உள்ளிட்டோர் ஒவ்வொரு படத்திற்கும் இசையமைத்திருந்தனர். இந்த ஆந்தாலஜி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

கேரளா க்ரைம் ஃபைல்ஸ்:

எர்ணாக்குளம் பகுதியில் நடைபெறும் கொலைகளை போலீஸார் விசாரிக்கும் க்ரைம் கதையாக இருந்தது, கேரளா க்ரைம் ஃபைல்ஸ். இந்த தொடரில் அஜு வர்கீஸ், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த தொடரில் மொத்தம் 6 எபிசோடுகள் உள்ளன. இதனை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

Kumari Srimathi

குமாரி ஸ்ரீமதி:

நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருந்த தொடர், குமாரி ஸ்ரீமதி. தெலுங்கு மொழியில் உருவாகியிருந்த இந்த தொடரை கோம்தேஷ் உபாத்யாய் இயக்கியிருந்தார். இந்த வெப் தொடருக்கு பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே கிடைத்தது. இத்தொடரை, அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம். 

மேலும் படிக்க | 2023ல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள்!

தி வில்லேஜ்:

ஆர்யா முதன் முதலாக நடித்திருந்த வெப் தொடர், தி வில்லேஜ். இதில், ஆர்யாவுடன் இணைந்து திவ்யா பிள்ளை, ஜார்ஜ் மரியன், ஜான் கொக்கேன், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அஷ்வின் ஸ்ரீவத்சங்கம் எழுதிய கிராஃபிக் நாவலை மையமாக வைத்து இந்த தொடரின் கதை எழுதப்பட்டிருந்தது. இந்த தொடருக்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தது. இதனை, அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம். இதில் மொத்தம் 6 எபிசோடுகள் உள்ளன.

மாஸ்டர்பீஸ்:

மலையாள மொழியில் வெளியான ஓடிடி தொடர், மாஸ்டர் பீஸ். இந்த தொடரை பிரவீன் எஸ் எழுதியிருந்தார், ஸ்ரீஜித் இயக்கியிருந்தார். நித்யா மேனன், ஷராஃப் உதின், மாலா பார்வதி, அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த தொடரை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

ஸ்வீட் காரம் காபி:

தமிழ் மொழியில் காமெடி-டிராமா தொடராக வெளியாகியிருந்தது, ஸ்வீட் காரம் காபி. இதனை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் ஸ்வாதி ரகுராமன் உள்ளிட்டோர் இயக்கியிருந்தனர். மூன்று தலைமுறை பெண்களை மையமாக வைத்து இந்த தொடரின் கதை எழுதப்பட்டிருந்தது. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம். 

மேலும் படிக்க | 2023ஆம் ஆண்டின் டாப் 10 கோலிவுட் இயக்குநர்கள்! டாப்பில் இருப்பது யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours