சென்னை: மணிகண்டன் நடித்துள்ள ‘லவ்வர்’ (Lover) படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள படம் ‘லவ்வர்’ (lover). ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? – படம் முழுக்க முழுக்க காதலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதை டீசர் உணர்த்துகிறது. மணிகண்டன் இன்ட்ரோவுடன் தொடங்கும் டீசர் அடுத்து காதலர்களுக்குள்ளான சண்டையாக நகர்கிறது. தொடர்ந்து ‘பசங்களுக்கு தான் பசங்கள தெரியும்’ என மற்றவர்களுடன் பழுவது குறித்து தன் காதலியை மணிகண்டன் கட்டுப்படுத்த தொடங்குகிறார். அடுத்து சைக்கோதனமாக செயல்படும் ஆணாதிக்க காட்சிகள் வந்து செல்கின்றன.
‘6 வருஷ லவ் ப்ரோ. அவள என் பொண்டாட்டியா தான் பாத்தேன்’ என பிரிவை பேசும் வசனங்களும், இறுதியில் வரும் வசனமும் படம் ஆணாதிக்க காதல் டெம்ப்ளேட்டில் இருப்பதை உறுதி செய்கின்றன. டீசரில் புதிதாக எதுவுமில்லை. பார்த்து பழகிய அதே காதல் – பிரிவு – சோகம், ஆண்களின் சைகோ தன அடக்குமுறையாக மட்டுமே இருக்கிறது. படம் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது. டீசர் வீடியோ: