Prabhu Net Worth | அடேங்கப்பா இத்தனை கோடிக்கு அதிபதியா? பிரபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Estimated read time 1 min read

பிரபுவின் சொத்து மதிப்பு: வாரிசு நடிகர் என்றாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகர் பிரபு பிறந்தநாள் இன்று. இவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபு:
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் பிரபு. இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிவாஜி கணேசனுக்கு அடுத்தப்படியாக “ மக்கள் திலகம் ” என பெயர் எடுத்தவர். பிரபு அப்பாவுடன் சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் “சங்கிலி” படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து அக்னி நட்சத்திரம், மை டியர் மார்த்தாண்டம், பூ விழி ராசா, சின்னத்தம்பி, சின்னவர், உத்தமராசா, மிஸ்டர் மெட்ராஸ் ஆகிய படங்களில் நடித்து மக்கள் நாயகனாக மாறி விட்டார். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் பிரபு இன்று திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தந்தையுடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த பிரபு ஒரு கட்டத்திற்கு பிறகு லீட் ரோலில் நடித்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் பெற்றார்.

மேலும் படிக்க | DD3: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருந்த படத்தை இயக்கும் தனுஷ்!

நடிகர் பிரபு சினிமாவில் கதாநாயகனாக மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். ரஜினியுடன் 80களில் நடித்ததற்கு பிறகு மெகா ஹிட்டான சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். அதிலும் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதேபோல் கமல் ஹாசனுடன் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடித்து அதகளம் செய்திருப்பார். சமீபத்தில் வாரிசு படத்தில் சரத்குமாருக்கு நண்பராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபுவின் குடும்பம்:
பிரபுவின் பெற்றோர் நடிகர் சிவாஜி கணேசன், கமலா ஆகியோருக்கு 3வது மகனாக பிறந்தாா். இவரது அண்ணன் ராம்குமார், திரைப்படத் தயாரிப்பாளராவார். இவருக்கு சாந்தி என்ற அக்காவும், தேன்மொழி என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இவர் புனிதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் விக்ரம் பிரபு நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா சென்னையில் தொழில் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் அவருக்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் திருமணம் நடந்தது. அது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு சொத்து மதிப்பு:
இந்நிலையில் இளைய திலகம் பிரபு இன்று 67ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது சினிமாவில் கொடிகட்டி பறந்த சிவாஜியின் மகன் பிரபுவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதன்படி பிரபு மட்டும் சம்பாதித்த சொத்து சுமார் 90 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது இவருக்கு 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல் இவர் கோயமுத்தூர், டெல்லி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் வீடுகள் வைத்திருக்கிறாராம், இதனுடன் விளம்பர மாடலாகவும் இருந்துவருகிறார். இவை தவிர்த்து சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம், சென்னையில் சாந்தி தியேட்டர், கல்யாண மண்டபம், மல்டி காம்ப்ளக்ஸ் என பல தொழில்களையும் செய்துவருகிறாராம்.

ஆடி, பிஎம்டபுள்யூ என பல சொகுசு கார்களையும் வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவரின் சொத்து மதிப்பு 500 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிக அளவிலான வருமான வரி செலுத்தும் தென்னிந்திய நடிகராக இருந்து வருகிறார் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அப்படியே அசினை உரித்து வைத்திருக்கும் அவரது மகள்! போட்டோவை பார்த்துள்ளீர்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours