Bonda Mani passed away | நகைச்சுவை நடிகர் போண்டா காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகினர்

Estimated read time 1 min read

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்: கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார். அவருக்கு வயது 60.

நடிகர் போண்டா மணி:
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை துணை நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இவர் ஈழத்தை பூர்விகமாகக் கொண்டவர். இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும். இவருடன் உடன் பிறந்த 16 நபர்களில் 8 நபர்கள் இலங்கை இனக்கலவரத்தில் இறந்து விட்டார்கள். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார். இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் 1994 ஆம் ஆண்டில் வெளியான தென்றல் வரும் தெரு படம் தான் போண்டா மணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் காமெடி காட்சிகள் மூலம் மக்களிடத்தில் வரவேற்பை பெற்றார். அதுமட்டுமின்றி விவேக், வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நான் பெத்த மகனே, சுந்தரா டிராவல்ஸ், அன்பு, திருமலை, ஐயா, ஆயுதம், வின்னர், படிக்காதவன், மருதமலை. வேலாயுதம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில்  போண்டா மணி நடித்துள்ளார். இதில் குறிப்பாக, மருதமலை படத்தில் வடிவேலுவுடன் இவர் வரும் காட்சி இன்றளவும் பலரால் ரசிக்கப்பட்டது.

மேலும் படிக்க | Salaar Box Office: சலார் படத்தின் முதல்நாள் வசூல் விவரம்! தமிழ்நாட்டில் இவ்வளவுதான் கலக்ஷனா..?

உடல்நிலை பாதிப்பு:
ரசிகர்களை தனது நகைச்சுவை திறனால் மகிழ்வித்த போண்டா மணி, ஒரு படப்பிடிப்பின் போது சாக்கடையில் விழுந்ததில், கழிவுநீரை பருகும் சூழல் உருவானது. இதனால் அவரது இரு சிறுநீரகங்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போண்டா மணி. இதனையடுத்து மருத்துவமனையில் மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். அவருக்கு சில சினிமா நட்சத்திரங்கள் நிதி உதவி அளித்த நிலையில், கடுமையான போராட்டத்திற்கு பின், போண்டா மணி மீண்டு வந்தார். நீண்ட ஓய்வுக்குப் பின் தேறி வந்த போண்டா மணி, அதன் பின் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இருப்பினும் அவரது உடல்நிலை பலவீனமாக இருந்ததுள்ளது, இருப்பினும் குடும்ப சூழல் காரணமாக வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தார். 

போண்டா மணி காலமானார்:
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பல்லாவரத்தில் உள்ள வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். பதறிப் போன குடும்பத்தார் உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது இரு சிறுநீரகங்களும செயல் இழந்ததாகவும், அதன் காரணமாக ஏற்கனவே உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்தனர். நகைச்சுவை நடிகர் போண்டா மணி மரணம் கேள்விப்பட்ட திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மறைந்த போண்டா மணி, இதுவரை 175க்கும் மேற்பட்ட திரைப்படங்களில நடித்திருக்கிறார். அவரது வீட்டில் திரையுலகினர் அஞ்சலி செலுத்தஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சாவிலிருந்து கடுமையாக போராடி மீண்டு வந்த போண்டா மணி, திடீரென உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘தளபதி 68’ படத்தின் தலைப்பு இதுதான்! அட..இது புதுசா இருக்கே..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours