ரூ. 58 கோடி முதல் நாள் டங்கி பட வசூல்
23 டிச, 2023 – 13:39 IST

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து தயாரித்து நேற்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் ‘டங்கி’. இதில் டாப்சி, விக்கி கவுசல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் இது ராஜ்குமார் ஹிராணி படமாக தான் எதிர்பார்த்தனர். ஷாரூக்கான் படமாக இல்லை.
இந்த படம் தற்போது விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்பது தான் விமர்சனமாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ. 58 கோடி எட்டியதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்து வெளிவந்த பதான், ஜவான் படங்களில் வசூலைக் விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours