சில தினங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டுக்குச் சென்று வந்த தினேஷின் அப்பா கோபால்சாமி இந்தத் தகவலை உறுதிபடுத்தியிருக்கிறார். அவரிடம் நாம் பேசினோம். ‘’காதலிச்சாக் கூட என்னுடைய அப்பா அம்மா சம்மதத்துடன்தான் கல்யாணம் செய்வேன்” எனச் சொல்லியிருக்கான் என் மகன். அதனால அந்தப் பொண்ணு எங்ககிட்ட வந்து பேசுச்சு. நாங்களும் பையனுடைய சந்தோஷம்தான் முக்கியம்னு நினைச்சுக் கல்யாணத்துக்குச் சம்மதிசோம். எட்டு வருஷம் வாழ்ந்தாங்க. இப்ப சிலருடைய தவறான வழிகாட்டுதலால என் பையன் வாழ்க்கை நடுத்தெருவுல நிக்குது.

சரி செய்ய எவ்வளவோ முயற்சி செய்துட்டோம். ஆனா இறங்கி வர்றது ரெண்டு தரப்புலயும் இருக்கணும். ஒரு தரப்பு மட்டுமே சமாதானத்துக்குத் தயாரா இருந்தா அதுல நல்ல தீர்வு எப்படிக் கிடைக்கும்? அந்தப் பொண்ணு பிடிவாதமா இருக்கு. நாங்க வேற என்ன செய்ய முடியும்? எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான்.
காதலிச்சு பண்றோமோ, பெரியவங்க பார்த்துப் பண்றோமோ இன்னைக்குத் தேதிக்கு டைவர்ஸ்ங்கிறது எல்லார் வாழ்க்கையிலயும் சாதாரணமாகிடுச்சு. அதனால எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டுப் ’பொழப்ப பாரு’ன்னு சொல்லிட்டேன்.
நடிக்க வாய்ப்பு கிடைக்க வரைக்கும் சென்னையில இருக்கட்டும். வாய்ப்பு இல்லையா ஊருக்கு வந்துடுனு சொல்லிட்டேன். வீடு, தோட்டம்னு என்னால முடிஞ்ச சக்திக்குக் கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கேன். அதைப் பார்த்துட்டு இருக்க வேண்டியதுதான். யார் யாருக்கு என்ன அமைப்புன்னு இருக்குதோ அதன்படிதான் நடக்கும்கிறதை நான் நம்பறேன்’’ என்கிற தினேஷின் அப்பா,
+ There are no comments
Add yours