9 Tamil Movies Released Today Fight Club Kannagi Review Which Is Worth To Watch

Estimated read time 1 min read

சில நேரங்களில், ஒரே நாளில் பல தமிழ் படங்கள் வெளியாவது சகஜமாகி வருகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 9 தமிழ் படங்கள் வெளியாகியுள்ளது. அவை என்னென்ன படங்கள்? அதில் எந்த படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது? இங்கு பார்ப்போம். 

ஃபைட் க்ளப்:

லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்துள்ள தயாரிப்பு நிறுவனம், முதன்முதலாக தயாரித்துள்ள படம், ஃபைட் க்ளப். இந்த படத்தில்  ‘உரியடி’ விஜயகுமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். புதுமுக இயக்குநர் அபாஸ் ஏ ரஹ்மத் இயக்கியிருக்கிறார். படம், ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து, நல்ல திரைக்கதையுடன் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

கண்ணகி:

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தின் கதை, நான்கு பெண்களை மையமாக வைத்து பயணிப்பது போல எழுதப்பட்டிருக்கிறது. கதைக்கு ஏற்றார் போல சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் நான்கு பிரச்சனைகளை இந்த படத்தில் பேசியிருக்கின்றனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

பாட்டி சொல்லைத்தட்டாதே:

1988ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம், பாட்டி சொல்லை தட்டாதே. கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து அதே போன்ற ஒரு கதையை மீண்டும் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர். இதில், தொகுப்பாளராக அனைவருக்கும் பரீச்சியமான விஜய் நடித்திருக்கிறார். பழைய ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படத்தில் ஹீரோவாக வந்த பாண்டியராஜனும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். நளினி, காமெடி நடிகர் பாலா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வெகு சில திரையரங்குகளிலேயே வெளியாகியுள்ளதால் விமர்சனம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

விவேசினி:

நாசர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் படம்ம், விவேசினி. த்ரில்லர்-மிஸ்டரி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பவன் ராஜகோபாலன் என்பவர் இயக்கியிருக்கிறார் படம் ஓரளவிற்கு சுமாராக இருப்பதாக படம் பார்த்த ஒரு சிலர் விமர்சனங்களை கூறியுள்ளார். 

மேலும் படிக்க | இந்த வருடம் யூ-ட்யூபில் இந்தியர்கள் அதிகம் தேடியது இதுதான்… லிஸ்டில் ஜெயிலர், லியோ!

Movies

தீதும் சூதும்:

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர், ஸ்ரீ. இவர், ஏற்கனவே டமால் டுமீல் என்ற படத்தை இயக்கி மக்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது இவரது இயக்கத்தில் தீதும் சூதும் என்ற படம் வெளியாகியுள்ளது. இதில், கதாநாயகனாக அவரே நடித்திருக்கிறார். மற்றபடி, படத்தில் அனைவருமே புதுமுகங்கள். காதல்-த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பிற படங்கள்..

மேற்கூறிய படங்கள் மட்டுமன்றி, இன்னும் இரண்டு படங்களும் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒன்று, ஸ்ரீ சபரி ஐப்பன். இதில், கஞ்சா கருப்பு, நடிகை சோனா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ராஜா தேசிங்கு என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களில் நாயகனாக நடித்து வந்த சித்து, அகோரி படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கியிருக்கிறார். சிவனடியாராக இருக்கும் அகோரி ஒருவருக்கும் தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதைக்களமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களுக்கும் இதுவரை சரியான விமர்சனங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இரு படங்கள்..

இரண்டு படங்கள், இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று, தனுஷின் ‘மயக்கம் என்ன’ திரைப்படம். இப்படம் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் மீண்டும் தியேட்டருக்கு படையெடுத்துள்ளனர். இதையடுத்து, யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் சேப்டர் 2 படமும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மீண்டும் ஒருமுறை தியேட்டரில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

எதை பார்ப்பது? 

தற்போது வெளியாகியுள்ள அனைத்து படங்களிலும், ஃபைட் க்ளப் படத்திற்கு ஓரளவு நல்ல விமர்சனங்களே எழுந்துள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் கண்ணகி படம் உள்ளது. எனவே, இந்த இரு படங்களை சென்று பார்க்கலாம் படம் பார்க்காத ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர். 

மேலும் படிக்க | சென்னையில் விமர்சையாக நடைபெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours