‘’மௌனம் பேசியதே , ராம், பருத்திவீரன்‘’ – இந்த மூன்று படைப்புகளுமே போதும் அண்ணன் அமீர் அவர்களை – இன்னொரு பாரதிராஜா – வாக ஏற்றுக்கொள்ள எனத்தோன்றுகிறது. அவர் மீது நீங்கள் சேற்றை வாரி இறைத்து -அவருக்கு ஆதரவாக எல்லோரையும் உண்மை பேச வைத்து, அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, உங்களுக்கு பெரும் நன்றி.
உண்மை என்று ஏதோதோ பேசினீர்களே
இப்போது நாங்கள் உண்மை பேச ஆரம்பிகட்டா?
ஒரு அரசியல் பின்புலம் கொண்டவரிடம் பணத்தை பல மடங்கு பெருக்கி தருவதாக கூறி 100 கோடி பெற்று, பின் மொத்த பணத்தையும் தராமல் நீங்கள் ஏமாற்றி விட்டதாக, ஒரு செய்தி திரைத்துறை எங்கும் உலா வருகிறதே – அதை பற்றி பேசுவோமா? அல்லது உங்களின் உண்மைத்தன்மை பற்றி பேசுவோமா ?
உங்களின் கிரிமினல் தனத்தால் இன்னும் உங்களை பற்றிய உண்மைகள் வெளிவரப்போகிறது. இதற்கு ஒரே தீர்வு – பேட்டியோ, மன்னிப்பு கடிதமோ அல்ல , நீதி மன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்துக்கொண்டு , இடையில் பேசும் இடைத்தரகர்களின் பேச்சில் மாட்டிக்கொள்ளாமல் 17 ஆண்டுகளுக்கு முன்பு – எவ்வளவு பணத்தை ஏமாற்றுனீர்களோ – அதன் இன்றைய மதிப்பு என்னவோ -அதை – அண்ணன் அமீர் அவர்களிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைத்து – இந்த பிரச்சனையை – நீங்கள் முடித்து கொள்வதுதான். அதுவரை…! ஓயாது அலைகள்” என்று அறிக்கையில் குறிப்பிட்டு தனது ஆதரவை அமீருக்கு தெரிவித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours